கடம்ப மலர்

கடம்ப மலர்

மதுரை மீனாக்ஷி

மதுரை மீனாக்ஷி காதல் எப்படிப் பிறக்கிறது என்பது ஒரு தேவ ரகசியம். மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய சிறந்த உணர்ச்சிகளில் தலை நிற்பது காதல். ஏன் ? சொல்லப்போனால் தேவர்களே இந்தக் காதல் உணர்ச்சி பெற மனிதர்களாகப் பிறக்க வேண்டி யிருந்திருக்கிறது. பர்வத ராஜன் புத்திரி பார்வதியை மணக்க பரமசிவன் இந்த உலகுக்கே இறங்கி வந்திருக்கிறார். அயோத்தியில்…

தாயான தத்துவம்

தாயான தத்துவம் பிரான்சு தேசத்திலே இரண்டு கதைகள். ஒரு கதை கடவுள் மனிதனை முதல் முதலாகப் படைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் மனிதனுக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை. சுவர்க்கத்திற்கே திரும்ப ஓடி விடுகிறான். கடவுள் பார்க்கிறார். அவனை இந்த நில உலகத்திலேயே இருத்திக்கொள்வதற்காக இன்பப் பொருள்களான பசுஞ்சோலை, வண்ணமலர் சுவைப் பழம், இசைத் தும்பி,…

கன்னிக்குமரி

கன்னிக்குமரி நீலத்திரைக்கடல் ஓரத்திலே-நின்றுநித்தம் தவம் செய்குமரி எல்லை என்றே தமிழ் நாட்டின் தெற்கெல்லையைக் குறிப்பிடுகிறார் பாரதியார். அந்தக் குமரி முனையிலே தான் அன்னை பகவதி கன்னியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த அம்மை பகவதி யைப்பற்றி எத்தனையோ ரஸமான கதைகள். பரத கண்டத்தையே ஆண்ட ஆதிப் பரத மன்னனது புதல்வர் எட்டுப்பேர்; ஆனால் குமரி…

நெல்வேலி வடிவன்னை

நெல்வேலி வடிவன்னை ஆய்முத்துப் பந்தரின் மெல்லணைமீதுஉன் அருகிருந்துநீ முத்தம் தா என்று, அவர்கொஞ்சும்வேளை நித்தநித்தம்வேய்முத்த ரோடு என் குறைகள்எல்லாம் மெல்லமெல்லச்சொன்னால்வாய்முத்தம் சிந்தி விடுமோ?நெல்வேலி வடிவன்னையே என்று ஒரு பக்தன் பாடுகிறான், திருநெல்வேலியில் நெல்லையப்பருடன் கோயில் கொண்டிருக்கும் காந்தி மதியம்மையைப் பார்த்து. ஆம், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலிலும், திருநெல்வேலி காந்திமதி அம்மை கோயிலிலும் ஒரு சம்பிரதாயம்.…

சங்கரன் கோயில் கோமதி

சங்கரன் கோயில் கோமதி தாய்தன்னை அறியாத கன்றில்லைதன் கன்றைஆயும் அறியும், உலகின் தாயாகிஐய! நீ அறிதி எப்பொருளும் என்று இறைவன் தாய் ஆகி உலகில் உள்ள மக்களைப் புரக்கும் பான்மையைப் பாடுகிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். தாய்த் தன்மையிலும் தலை சிறந்த தாய்த் தன்மையாக அவன் கருதுவது பசுவிற்கும் கன்றிற்கும் உள்ள தொடர்பைத் தான். ஒரு…

ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி

ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி மன்றலின் வந்துமணித்தவிசு ஏறிவென்றி நெடுந்தகைவீரனும் ஆர்வத்துஇன்துணை அன்னமும்எய்தி யிருந்தார் ஒன்றிய போகமும்யோகமும் ஒத்தே என்று கவிச் சக்ரவர்த்தி கம்பன் ராமனும் சீதையும் மணக் கோலத்தில் இருப்பதை நினைந்து பாடு கின்றான். இப்படி இருவரும் போகமும் யோகமும் ஒன்றிய நிலையில் இருந்தார்கள் என்று சொல்லுவது பொருந்துமா என்று நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் எழுகின்றது. இதுபோலவே,…

கடவூர் அபிராமி

கடவூர் அபிராமி மார்க்கண்டன் கதை பிரசித்தமானது. பதினாறு வயது வரையே வாழும் வரம் பெற்ற சிறந்த புதல்வனை மிருகண்டு முனிவன் இறை அருளால் பெறுகிறான். அந்தப் புதல்வன் மார்க்கண்டன் பதினாறு வயது முடிகிறபோது, கடவூருக்கு வருகிறான். அங்குக் கோயில் கொண்டுள்ள அமிர்த கடேசுவரரை லிங்கத்தில் ஸ்தாபித்து பூசை செய்கிறான். அவன் அப்படிப் பூசை செய்து கொண்டிருக்கும்…

வேளூர் தையல் நாயகி

வேளூர் தையல் நாயகி மனிதனுக்கு அடிக்கடி நோய்வருகிறது. நோய்க்குக் காரணம் என்ன என்ன என்று விவரமாக டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவத் துறவி லாரென்ஸ் சொல்கிறார், ‘நம்முடைய குணங்களையும் ஆற்றலையும் நல்ல வழியில் வளர்க்கவே நோய் வருகிறது. அது ஆண்டவனுடைய அருள்’ என்று. மேலும் சொல்லுகிறார் ‘நாம் சுகமாக வாழும்போது இறைவனை விட்டு விலகி நிற்கிறோம்.…

காஞ்சி காமாக்ஷி

காஞ்சி காமாக்ஷி காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி,காசி விசாலாக்ஷி மூவரும் மும்மூர்த்திகளைவிட, பிரபலமானவர்கள். காரணம்: மூவரும் அவர் தம் அருள் நோக்காலேயே மக்களுக்கு வேண்டுவன எல்லாம் தரவல்ல வர்கள். மதுரை மீனாக்ஷி, பாண்டியன் மகளாகப் பிறந்து மானுடப் பெண்ணாகவே வளர்ந்து அரசி யாகவே அரியணை ஏறியவள். ஆகவே, அவளுக்கு இரண்டே கைகள். செண்டேந்திய திருக்கரம் ஒன்று,…

காசி விசாலாக்ஷி

காசி விசாலாக்ஷி கைலையைக் காண ஆசைப்பட்டார் அப்பர். அதுவும் இந்தப் பூத உடலோடேயே. ஆனால் அவருக்கு அந்தத் தள்ளாத வயதிலே அத்தனை தூரம் நடந்து சென்று கைலையைக் காண இயலவில்லை. அதற்காக ஏங்கினார். ஒருநாள் அவரது கனவில் கைலாசபதியே எழுந்தருளி கைலையைக் காண நீ நீண்ட தூரம் நடக்க வேண்டியதில்லை. நீ தங்கியிருக்கும் திருவையாற்றிலே உள்ள…