எப்படிப் புகழ்வேன்!

எப்படிப் புகழ்வேன்! கிள்ளிவளவன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். அரசவை கூடியிருந்தது. அரசனுடைய சுற்றமாகிய அமைச்சர், படைத் தலைவர் முதலியோரும் புலவரும் பாணரும் பிறரும் அவையில் அமர்ந்திருந்தனர். புலவர்கள் அன்று கிள்ளி வளவனுடைய இயல்புகளைப் பாராட்டிப் பல பாடல்களைப் பாடினார்கள். ஒரு புலவர் அவனுடைய ஈகையைச் சிறப்பித்துப் பாடினார். “கற்பகமும் காரும் தோல்வி யுறும்படி ஈந்து உவக்கும் பெரு…








