சூரிய காந்தம்

சூரிய காந்தம் உபாத்தியாயர் விஞ்ஞானத்தைப் போதிக்கிறார். ஒளியைப் பற்றிச் சொல்லித் தருகிறார்; கண்ணாடி மூலமாக ஒளிக் கதிர்கள் எப்படிப் பாய்கின்றன என்பதை விளக்குகிறார். புடைத்திருக்கும் பூதக் கண்ணாடியில் கதிர்கள் பாய்ந்தால் அவை ஓரிடத்தில் ஒன்றுபட்டு அதிக உஷ்ணத்தை உண்டாக்கும் என்று ஒரு செய்தியைச் சொல்கிறார். அவர் அதை நிரூபித்துக் காட்டுகிறார். எப்படி? பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு சிறிது…








