திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1-10 of 1330

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku

Translation: 'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world

Meaning: As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

மு. வரதராசனார்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
மு. கருணாநிதி: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin

Translation: That lore is vain which does not fall At His good feet who knoweth all

Meaning: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

மு. வரதராசனார்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
சாலமன் பாப்பையா: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?
மு. கருணாநிதி: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar

Translation: Long they live on earth who gain The feet of God in florid brain

Meaning: They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds

மு. வரதராசனார்: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
சாலமன் பாப்பையா: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
மு. கருணாநிதி: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila

Translation: Who hold His feet who likes nor loathes Are free from woes of human births

Meaning: To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come

மு. வரதராசனார்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
சாலமன் பாப்பையா: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை
மு. கருணாநிதி: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu

Translation: God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night

Meaning: The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

மு. வரதராசனார்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
சாலமன் பாப்பையா: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை
மு. கருணாநிதி: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka
Nerinindraar Neetuvaazh Vaar

Translation: They prosper long who walk His way Who has the senses signed away

Meaning: Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses

மு. வரதராசனார்: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
சாலமன் பாப்பையா: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்
மு. கருணாநிதி: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu

Translation: His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind

Meaning: Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable

மு. வரதராசனார்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
சாலமன் பாப்பையா: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
மு. கருணாநிதி: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu

Translation: Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea

Meaning: None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

மு. வரதராசனார்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
சாலமன் பாப்பையா: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்
மு. கருணாநிதி: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

Kolil Poriyin Kunamilave Enkunaththaan
Thaalai Vanangaath Thalai

Translation: Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine

Meaning: The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation

மு. வரதராசனார்: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
சாலமன் பாப்பையா: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
மு. கருணாநிதி: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்

கடவுள் வாழ்த்து

Virtue • Prologue
#10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Atiseraa Thaar

Translation: The sea of births they alone swim Who clench His feet and cleave to Him

Meaning: None can swim the great sea of births but those who are united to the feet of God

மு. வரதராசனார்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
சாலமன் பாப்பையா: கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்
மு. கருணாநிதி: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
123Next »
Page 1 of 133