கடம்ப மலர்

கடம்ப மலர்

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன?

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன? சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். முருகனுக்கே ஒரு பெயர் சரவணன் என்று அவன் பிறப்பைப் பற்றிய கதை தெரியும். இறைவனது நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த பொறிகளை அக்கினி ஏந்தி வாயுவிடம் கொடுக்க, வாயு கங்கையிலே விட, கங்கை சரவணப் பொய்கையில் விட்டுவிடுகிறாள். அங்கே ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக…

திருச்செந்தூர் வரலாறு

திருச்செந்தூர் வரலாறு ஆறுமுகன் கோயில் கொண்டிருக்கும் இடங்கள் ஆறு என்பதை நக்கீரர் விளக்கமாக உரைக்கிறார். அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை என்பதையும் அறிவோம். இந்த இடங்களே முருகனது படைவீடுகள் என்றும் குறிக்கப்படுகின்றன. இந்தப் படை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்பதே இன்றைய திருச்செந்தூர். பண்டைத் தமிழ் நூல்களில் இந்தத்தலம் திருச்சீரலைவாய்,…

காவடி வரலாறு

காவடி வரலாறு காவடி எடுப்பதைப் பற்றி ஒரு வார்த்தை, இந்த வழக்கம் எபபடி வந்தது? இதற்கு ஒரு கதை. சூரபதுமனைச் சேர்ந்த அசுரர்களில் ஒருவனான இடும்பன் போருக்கு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடி அகத்தியரைச் சரண் அடைகிறான். அகத்தியரும் தாம் சிவபெருமானிடம் பெற்று கேதாரத்தில் வைத்து விட்டு வந்திருந்த சிவகிரி, சக்தி கிரிகளை எடுத்து வருமாறு ஏவுகிறார்.…

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் வரலாறு செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலே திருவாதவூரிலே ஆமாத்திய அந்தணர் குலத்திலே இறைவனருளால் தோன்றியவர் திருவாதவூரர். இளமையிலே எல்லாக் கலைகளையும் பயின்ற வாதவூரரைப் பாண்டியன் தன் அமைச்சராக அமர்த்தித் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துப் பாராட்டினான். வாதவூரர் பாண்டியனுக்கு அமைச்சராய் அறநெறி வழுவாமல் தம் கடமையைச் செய்து வந்தார். ஆயினும் உலகியற் பற்றின்றி மெய்ப்பொருளுணர்த்தவல்ல அருட்குருவை நாடியிருந்தார்.…

அருளாளன்

அருளாளன் கொட்டு மேள ஒலி இனியதாகக் கேட்கிறது. நாயனத்தின் ஒலியும் நெடுந்தூரம் வரைக்கும் கேட்கிறது. பெரிய ஆரவாரம்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கிழவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே ஆரவாரம் செய்கிறார்கள். இது ஏதோ ஒரு கல்யாண ஊர்வலம் போல இருக்கிறது. ஆம்! கல்யாண ஊர்வலந்தான்! பேரழகர், சிறந்த காளை, திருநாவலூரராகிய நம்பியாரூரர் தம் கல்யாணத்தின் பொருட்டு…

தம்பிரான் தோழர்

தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தோழராக இருப்பவர். தம்பிரான் தோழர் என்பது அவருடைய பெயர்களில் ஒன்று. இறைவனை மிக எளியவனாக எண்ணிச் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். இறைவனிடம் மிக நெருங்கிக் கூறும் முறையில் அவை அமைந்திருக்கும். தமக்கு வேண்டிய பொருள்கள் இன்னவையென்றும், அவற்றை உடனே தந்தருள வேண்டுமென்றும் பாடுவார். இன்னும் சில பாடல்கள் இறைவனைப்…

தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன்

தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன் காமனை எரித்தான் சிவபெருமான் என்பதும், அவன் ஒரு குழந்தையைப் பெற்றான் என்ற செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பாடுபோலத் தோன்றுகின்றன. முருகன் சிவபெருமானுக்குக் குழந்தை. உலகில் ஆணும் பெண்ணும் கலந்து இல்வாழ்க்கை நடத்தும்பொழுது அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்னாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உண்டாகிறது; காம நுகர்சியை அடைகிறார்கள்.…

இரட்டை விலங்கு

இரட்டை விலங்கு தாமரைப் பூவாகிய அழகிய பீடத்தில் சதுர் முகப் பிரமன் வீற்றிருக்கிறான். காலையில் செய்ய வேண்டிய ஔபாசனத்தையும் வேதபாராயணத்தையும் செய்தாகிவிட்டது. கலைமகள் அருகிருந்து தான் செய்யவேண்டிய உதவிகளைச் செய்ய, நெறி முறை வழுவாமல் செய்யவேண்டிய வைதிக காரியங்களைக் குறைவின்றி நிறைவேற்றிய பிரமதேவனுக்குச் சிறிது பசித்ததுபோலும்! தன்னுடைய கணக்குச் சுருணையை எடுத்துவரச் சொல்லிப் பார்க்க உட்கார்கிறான்.…

நாகாசல வேலவன்

நாகாசல வேலவன் அருணகிரி நாதர் பாடிய அற்புதமான நூல்களுள் கந்தர் அநுபூதி, சுருங்கிய உருவத்தில் செறிந்த பொருளை உடையதாய் விளங்குகிறது. முருகனது திருவருளால் பெற்ற அநுபவத்தின் சிறப்பைப் பலபடியாக எடுத்துச் சொல்வது அது. கந்தவேளின் திருவருளால் அநுபூதி பெற்று, விருந் துண்டவன் ஏப்பமிட்டாற் போலத் தம் அநுபவாதி சயத்தைப் பாடியது அநுபூதி. தாயுமானவர், கந்தர் அநு…

கங்கைப் புராணம்

கங்கைப் புராணம் காசியில் கங்கை ஓடுகிறது. அந்தக் கங்கையில் நீராடினால் பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இந்த நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. தம்முடைய இறுதிக் காலத்தில் காசிக்குச் சென்று அங்கே உயிர் நீத்துவிட வேண்டும் என்றும், அங்கேயே ஜலசமாதி அடைந்துவிட வேண்டும் என்றும் பல பெரியவர்கள் எண்ணி அங்கே போய்…