அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால்

அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால் திருச்சிக்கு அருகில் திருஎறும்பூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது அதைத் திருவரம்பூர் என்று வழங்குகிறார்கள். திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வரும் வழியில் அந்தத் தலம் இருக்கிறது. சிறிய குன்று. அங்கே எறும்பு ஆண்டவனைப் பூசை பண்ணிப் பேறு பெற்றதாம். திருவானைக்காவல் என்ற தலத்தைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கே யானை பூசை…








