கடம்ப மலர்

கடம்ப மலர்

மருள் நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு

மருள் நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு நள்ளிருள். திருப்பாதிரிப்புலியூரில் ஒரு சைனமடத்தில் இருந்த தருமசேனர் துடியாய்த் துடிக்கிறார். வயிற்றிலே தோன்றிய சூலை நோய் அவரால் பொறுக்க முடியவில்லை. குடலையே புரட்டி முடங்கச் செய்தது அந்த நோய். எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்து விட்டார்கள். மந்திரமும் பார்த்தார்கள். தண்ணீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தார்கள்; தீரவில்லை. மயிற் பீலியினால்…

ஊடலும் ஆடலும்

ஊடலும் ஆடலும் அப்பர் சுவாமிகள் காட்டும் கற்பனைக் காட்சிகளில் மற்றொன்று. இந்தக் காட்சியில் முக்கியமான பாத்திரங்கள் இறைவனும் கங்கையும் உமாதேவியாரும் ஆவர். பகீரதனுடைய வேண்டுகோளுக்குக் கங்கை எளிதில் இணங்கவில்லை. பல காலம் தவம் செய்த பிறகு கங்கை தோன்ற, “என்னுடைய முன்னோர்களின் என்பு மேல் பாய வேண்டும்” என்று பகீரதன் அவளை வேண்டினான். அப்போது கங்கை…

ஆவி வாழும் வீடு

ஆவி வாழும் வீடு சின்ன வீட்டை ஒருவர் கட்டினார்; மண்ணினால் எடுத்த வீடு; கூரை வேய்ந்த வீடு. மரம், மண், தென்னங்கீற்று இந்த மூன்றையும் வைத்துக்கொண்டே அவர் இதைக் கட்டிவிட்டார். இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தால், தரையிலே இது நிற்பதற்கும், நிழல் தருவதற்கும் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றன என்பதை எளிதிலே கண்டுகொள்ளலாம். வீட்டின் கூரையைத்…

கருணையுருவாகிய ருத்திராட்சம்

கருணையுருவாகிய ருத்திராட்சம் யாருக்கும் இல்லாத அடையாளங்கள் சிவபெருமானிடத்தில் இருக்கின்றன. மற்றவர்களெல்லாம் அழகும் உயர்வும் உடைய பொருள்களைத் தமக்கு ஆடையாகவும் அணியாகவும் இருப்பிடமாகவும் கொண்டிருப்பார்கள். சிவபெருமானோ இதற்கு மாறாக, அழகற்றனவும், அச்சத்தைத் தருவனவும், உலகத்தாரின் இகழ்ச்சிக்குரியனவுமாகியவற்றைக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இயல்பாகவே அழகும் உயர்வும் இருப்பதனால் அணியாலும் ஆடையாலும் புதிய அழகும் மதிப்பும் வரவேண்டும் என்பது இல்லை. அவன்…

சகலகலாவல்லி மாலை நூலின் வரலாறு

சகலகலாவல்லி மாலை நூலின் வரலாறு காசி மடத்தின் மூல ஆசிரியராகிய குமரகுருபரர் காசியில் எழுந்தருளியிருந்தார். அங்கே ஒரு மடத்தை நிறுவ வேண்டுமென்று அவர் எண்ணினார். அப்போது நவாபு ஒருவர் காசியை ஆண்டு கொண்டிருந்தார். மடம் கட்ட வேண்டுமானால் காசியில் இடம் வேண்டும். கங்கைக் கரையில் நல்ல இடத்தில் ஒரு மடம் கட்ட வேண்டுமானால் அதற்கு நவாபின்…

தெய்விகக் குருநாதர்

தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று சொல்வார்கள். பொதுவாகக் குரு என்று சொன்னால் அது தட்சிணா மூர்த்தியைத் தான் குறிக்கும். தட்சிணாமூர்த்தியைப் பற்றி ஒரு சுலோகம் வட மொழியில் உண்டு. ‘ஆல மரத்தினடியில் தேசு நிறைந்த திருமுகத்துடன் தென்முகக் கடவுள் வீற்றிருக்கிறார். அவருக்குக் கீழ் நான்கு மாணாக்கர்கள் அமர்ந்திருக்கிறார்கள். என்ன ஆச்சரியம்! குருநாதர் இளையவராக இருக்கிறார்; மாணாக்கர்கள் கிழவர்களாக…

திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாறு

திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாறு மாலை நேரம். தண்ணிய தென்றல் மெல்ல வீசியது. சூரியன் தன் கிரணங்களை மடக்கிக் கொண்டு மேல் கடலிலே குளிக்க விரைந்து கொண்டிருந்தான். அப்போது பாண்டியன் தன் அரண்மனையின் மேல் மாடத்தில் தென்றற் காற்றையும் வானத்துக் காட்சியையும் நுகர்ந்து உலாவிக் கொண்டிருந்தான். சட்டென்று பாண்டியன் இயக்கம் தடைப்பட்டது. அவன் எதையோ கூர்ந்து கவனித்தான்.…

“தனிமயில் ஏறும் இராவுத்தனே”

“தனிமயில் ஏறும் இராவுத்தனே” ராவுத்தன் என்ற சொல் முஸ்லிம்களை நினைப்பூட்டுகிறது. அருணகிரியார் காலத்திற்கு முன்பே இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில், மாணிக்கவாசகருக்காகக் குதிரை ராவுத்தராக வந்த ஆண்டவனது திருக்கோலத்தை முஸ்லிம்கள் போலவே வருணித்திருக்கிறார் அதைப் பாடிய புலவர். பழங்காலத்தில் அரபு நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் குதிரைகள் வருவது வழக்கம். அந்தக்…

முருகப் பெருமானின் அருளமுதம்

முருகப் பெருமானின் அருளமுதம் தேவர்களுக்கு ஒரு நாள் ஓர் ஆசை தோன்றியது. உலகில் இருக்கிற மக்களும் சாகிறார்கள். நாமும் சாகிறோமே! சாவாமல் இருப்பதற்கு ஏதாவது மருந்து வேண்டும். மூலிகைகளை எல்லாம் கொண்டு வந்து கலுவத்தில் அரைத்துச் சாப்பிடலாமா? ‘அது நம் பெருமைக்கு அடுக்காது’ என்று யோசனை பண்ணினார்கள். ‘வேதங்களில் சொல்லப் பட்டிருக்கிறதே அமிருதம் என்ற ஒன்று,…

மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி

மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி “மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்”என்ற லட்சியத்தைக் கொண்டு வாழ்ந்த அரசர் மெய்ப்பொருள் நாயனார். அவருடைய பகைவன் முத்திநாதன் எத்தனையோ தடவைகள் படை எடுத்து வந்து நாயனாரை வெல்ல முடியாமல் தோற்று ஓடிப் போனான். நேருக்கு நேர் நின்று அவரை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவ்வஞ்சகன் எப்படியாவது அவரைக்…