கடம்ப மலர்

கடம்ப மலர்

கனகதாசரின் பக்தி

கனகதாசரின் பக்தி கனகதாசர் என்ற பெரியவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளமையில் ஒரு குருநாதரை அணுகித் தமக்கு உபதேசம் பண்ண வேண்டுமென்று கேட்டார். அந்தக் குருநாதர் கனக தாசரின் தகுதியை உணர்வதற்காக அவருடைய கையில் ஒரு கனியைக் கொடுத்து, “இதை யாரும் இல்லாத இடத்தில் நீ போய்ச் சாப்பிடு” என்று சொன்னார். அதை…

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய கோளறு திருப்பதிகம் வரலாறு

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய கோளறு திருப்பதிகம் வரலாறு திருநாவுக்கரசரோடு திருஞானசம்பந்தர் தல யாத்திரை செய்து கொண்டு வந்து திருமறைக் காட்டில் எழுந்தருளியிருக்கும் போது பாண்டி நாட்டில் மதுராபுரியிலே அக் காலத்து அரசியற்றி வந்த கூன்பாண்டியர் ஊழ்வினைத் திறத்தால் உண்மை நெறியாகிய சைவத்தை விட்டுச் சமண சமயப் படுகுழியில் வீழ்ந்தாழ்ந்தார். அவரைப் பின்பற்றி…

இறைவனுக்குப் பட்சபாதம் உண்டா?

இறைவனுக்குப் பட்சபாதம் உண்டா? வைகுண்ட ஏகாதசி அன்று ஓர் ஏழைக் கிழவி பலகாரத்திற்கு உப்புமாச் செய்ய ரவையை எடுத்தாள். எப்போதோ வாங்கி டப்பாவில் கொட்டி வைத்திருந்த ரவை அது. அதில் புழு இருந்தது. அதை முறத்தில் கொட்டி, சிறிது வெயிலில் காய வைத்தாள். காக்கை கொத்துமே என்று தன் பேரனை அழைத்து அதற்குக் காவலாக இருக்க…

அகத்தியருக்கு தமிழ் கற்றுத் தந்த கந்த குரு

அகத்தியருக்கு தமிழ் கற்றுத் தந்த கந்த குரு சிவபெருமான் திருமணத்தின் பொருட்டு கைலாயத்திலிருந்து வந்தான். வந்து இமாசலத்தில் இறங்கினான். மேனையும், பிற பெண்களும் சிவபெருமானுடைய திருவடியைத் தாம்பாளத்தில் வைத்து, நல்ல பசுமாட்டுப் பாலால் கழுவிப் பாதபூஜை செய்து, வணங்கிப் போனார்கள். திருக்கல்யாணத்திற்குக் கோடிக்கணக்கான பேர்கள் வந்திருந்தார்கள். ஆண்டவன் திருமணம் ஆகையால் தேவலோகத்திலுள்ள தேவர்கள் வந்து விட்டார்கள்.…