திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 981-990 of 1330

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku

Translation: All goodness is duty to them Who are dutiful and sublime

Meaning: It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good

மு. வரதராசனார்: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா: நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
மு. கருணாநிதி: ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

Kunanalam Saandror Nalane Piranalam
Ennalaththu Ulladhooum Andru

Translation: Good in the great is character Than that there is nothing better

Meaning: The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights

மு. வரதராசனார்: சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
சாலமன் பாப்பையா: சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
மு. கருணாநிதி: நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu
Aindhusaal Oondriya Thoon

Translation: Love, truth, regard, modesty, grace These five are virtue's resting place

Meaning: Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests

மு. வரதராசனார்: அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
சாலமன் பாப்பையா: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
மு. கருணாநிதி: அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai
Sollaa Nalaththadhu Saalpu

Translation: Not to kill is penance pure Not to slander virtue sure

Meaning: Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults

மு. வரதராசனார்: தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
சாலமன் பாப்பையா: பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.
மு. கருணாநிதி: உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

Aatruvaar Aatral Panidhal Adhusaandror
Maatraarai Maatrum Patai

Translation: Humility is valour's strength A force that averts foes at length

Meaning: Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes

மு. வரதராசனார்: ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
சாலமன் பாப்பையா: ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.
மு. கருணாநிதி: ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal

Translation: To bear repulse e'en from the mean Is the touch-stone of worthy men

Meaning: The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors

மு. வரதராசனார்: சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
சாலமன் பாப்பையா: சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.
மு. கருணாநிதி: சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu

Translation: Of perfection what is the gain If it returns not joy for pain?

Meaning: Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?

மு. வரதராசனார்: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
சாலமன் பாப்பையா: தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?
மு. கருணாநிதி: தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.

Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin

Translation: No shame there is in poverty To one strong in good quality

Meaning: Poverty is no disgrace to one who abounds in good qualities

மு. வரதராசனார்: சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
சாலமன் பாப்பையா: சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
மு. கருணாநிதி: சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku
Aazhi Enappatu Vaar

Translation: Aeons may change but not the seer Who is a sea of virtue pure

Meaning: Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change

மு. வரதராசனார்: சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
சாலமன் பாப்பையா: சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
மு. கருணாநிதி: தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்

சான்றாண்மை

Wealth • Miscellaneous
#990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan
Thaangaadhu Manno Porai

Translation: The world will not more bear its weight If from high virtue fall the great

Meaning: If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden

மு. வரதராசனார்: சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
சாலமன் பாப்பையா: சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.
மு. கருணாநிதி: சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது