திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 871-880 of 1330

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru

Translation: Let not one even as a sport The ill-natured enmity court

Meaning: The evil of hatred is not of a nature to be desired by one even in sport

மு. வரதராசனார்: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
சாலமன் பாப்பையா: பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
மு. கருணாநிதி: பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

Viller Uzhavar Pakaikolinum Kollarka
Soller Uzhavar Pakai

Translation: Incur the hate of bow-ploughers But not the hate of word-ploughers

Meaning: Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words

மு. வரதராசனார்: வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா: விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.
மு. கருணாநிதி: படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

Emur Ravarinum Ezhai Thamiyanaaip
Pallaar Pakaikol Pavan

Translation: Forlorn, who rouses many foes The worst insanity betrays

Meaning: He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men

மு. வரதராசனார்: தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
சாலமன் பாப்பையா: தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
மு. கருணாநிதி: தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

Pakainatpaak Kontozhukum Panputai Yaalan
Thakaimaikkan Thangitru Ulaku

Translation: This world goes safely in his grace Whose heart makes friends even of foes

Meaning: Whose worthy rule can change his foes to friends

மு. வரதராசனார்: பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
சாலமன் பாப்பையா: பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.
மு. கருணாநிதி: பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan
Indhunaiyaak Kolkavatrin Ondru

Translation: Alone, if two foes you oppose Make one of them your ally close

Meaning: He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself)

மு. வரதராசனார்: தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா: தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
மு. கருணாநிதி: தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#876
தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

Thera�num Theraa Vitinum Azhivinkan
Theraan Pakaaan Vital

Translation: Trust or distrust; during distress Keep aloof; don't mix with foes

Meaning: Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him)

மு. வரதராசனார்: இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா: ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
மு. கருணாநிதி: பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pakaivar Akaththu

Translation: To those who know not, tell not your pain Nor your weakness to foes explain

Meaning: Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes

மு. வரதராசனார்: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா: நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.
மு. கருணாநிதி: தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum
Pakaivarkan Patta Serukku

Translation: Know how and act and defend well The pride of enemies shall fall

Meaning: The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance

மு. வரதராசனார்: செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.
சாலமன் பாப்பையா: ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்‌.
மு. கருணாநிதி: வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu

Translation: Cut off thorn-trees when young they are; Grown hard, they cut your hands beware

Meaning: A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller

மு. வரதராசனார்: முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
சாலமன் பாப்பையா: நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.
மு. கருணாநிதி: முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்

பகைத்திறம் தெரிதல்

Wealth • Friendship
#880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

Uyirppa Ularallar Mandra Seyirppavar
Semmal Sidhaikkalaa Thaar

Translation: To breathe on earth they are not fit Defying foes who don't defeat

Meaning: Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe

மு. வரதராசனார்: பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா: நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.
மு. கருணாநிதி: பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது