திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 851-860 of 1330

இகல்

Wealth • Friendship
#851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பார஧க்கும் நோய்.

Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum
Panpinmai Paarikkum Noi

Translation: Hatred is a plague that divides And rouses illwill on all sides

Meaning: The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise

மு. வரதராசனார்: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
சாலமன் பாப்பையா: எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.
மு. கருணாநிதி: மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்

இகல்

Wealth • Friendship
#852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

Pakalkarudhip Patraa Seyinum Ikalkarudhi
Innaasey Yaamai Thalai

Translation: Rouse not hatred and confusion Though foes provoke disunion

Meaning: Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred

மு. வரதராசனார்: ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா: நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
மு. கருணாநிதி: வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்

இகல்

Wealth • Friendship
#853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

Ikalennum Evvanoi Neekkin Thavalillaath
Thaavil Vilakkam Tharum

Translation: Shun the plague of enmity And win everlasting glory

Meaning: To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame

மு. வரதராசனார்: ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.
மு. கருணாநிதி: மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்

இகல்

Wealth • Friendship
#854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin

Translation: Hate-the woe of woes destroy; Then joy of joys you can enjoy

Meaning: If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight

மு. வரதராசனார்: இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
சாலமன் பாப்பையா: துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
மு. கருணாநிதி: துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்

இகல்

Wealth • Friendship
#855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare
Mikalookkum Thanmai Yavar

Translation: Who can overcome them in glory That are free from enmity?

Meaning: Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

மு. வரதராசனார்: இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
சாலமன் பாப்பையா: தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?
மு. கருணாநிதி: மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை

இகல்

Wealth • Friendship
#856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai
Thavalum Ketalum Naniththu

Translation: His fall and ruin are quite near Who holds enmity sweet and dear

Meaning: Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred

மு. வரதராசனார்: இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
சாலமன் பாப்பையா: பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
மு. கருணாநிதி: மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்

இகல்

Wealth • Friendship
#857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval
Innaa Arivi Navar

Translation: They cannot see the supreme Truth Who hate and injure without ruth

Meaning: Who only know to work men woe, fulfilled of enmity

மு. வரதராசனார்: இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
சாலமன் பாப்பையா: மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
மு. கருணாநிதி: பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்

இகல்

Wealth • Friendship
#858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

Ikalirku Edhirsaaidhal Aakkam Adhanai
Mikalookkin Ookkumaam Ketu

Translation: To turn from enmity is gain Fomenting it brings fast ruin

Meaning: Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin

மு. வரதராசனார்: இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
சாலமன் பாப்பையா: மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.
மு. கருணாநிதி: மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்

இகல்

Wealth • Friendship
#859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku

Translation: Fortune favours when hate recedes Hatred exceeding ruin breeds

Meaning: At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase

மு. வரதராசனார்: ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
சாலமன் பாப்பையா: ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
மு. கருணாநிதி: ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்

இகல்

Wealth • Friendship
#860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam
Nannayam Ennum Serukku

Translation: All evils come from enmity All goodness flow from amity

Meaning: All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues

மு. வரதராசனார்: ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
சாலமன் பாப்பையா: மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
மு. கருணாநிதி: மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்