திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 841-850 of 1330

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

Arivinmai Inmaiyul Inmai Piridhinmai
Inmaiyaa Vaiyaa Thulaku

Translation: Want of wisdom is want of wants Want of aught else the world nev'r counts

Meaning: The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such

மு. வரதராசனார்: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
சாலமன் பாப்பையா: இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.
மு. கருணாநிதி: அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum
Illai Peruvaan Thavam

Translation: When fool bestows with glee a gift It comes but by getter's merit

Meaning: (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth)

மு. வரதராசனார்: அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
சாலமன் பாப்பையா: அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
மு. கருணாநிதி: அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

Arivilaar Thaandhammaip Peezhikkum Peezhai
Seruvaarkkum Seydhal Aridhu

Translation: The self-torments of fools exceed Ev'n tortures of their foes indeed

Meaning: The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes

மு. வரதராசனார்: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
சாலமன் பாப்பையா: அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.
மு. கருணாநிதி: எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#844
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

Venmai Enappatuva Thiyaadhenin Onmai
Utaiyamyaam Ennum Serukku

Translation: Stupidity is vanity That cries \"We have sagacity\"

Meaning: What is called want of wisdom is the vanity which says, "We are wise"

மு. வரதராசனார்: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
சாலமன் பாப்பையா: அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
மு. கருணாநிதி: ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

Kallaadha Merkon Tozhukal Kasatara
Valladhooum Aiyam Tharum

Translation: Feigning knowledge that one has not Leads to doubt ev'n that he has got

Meaning: Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered

மு. வரதராசனார்: அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
சாலமன் பாப்பையா: அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
மு. கருணாநிதி: அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

Atram Maraiththalo Pullarivu Thamvayin
Kutram Maraiyaa Vazhi

Translation: Fools their nakedness conceal And yet their glaring faults reveal

Meaning: Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them)

மு. வரதராசனார்: தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
சாலமன் பாப்பையா: தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
மு. கருணாநிதி: நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku

Translation: The fool that slights sacred counsels Upon himself great harm entails

Meaning: The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself

மு. வரதராசனார்: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
சாலமன் பாப்பையா: அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
மு. கருணாநிதி: நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

Evavum Seykalaan Thaandheraan Avvuyir
Poom Alavumor Noi

Translation: He listens not nor himself knows Plague is his life until it goes

Meaning: The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a

மு. வரதராசனார்: தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
சாலமன் பாப்பையா: அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
மு. கருணாநிதி: சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan
Kantaanaam Thaankanta Vaaru

Translation: Sans Self-sight in vain one opens Sight To the blind who bet their sight as right

Meaning: One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit"

மு. வரதராசனார்: அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
சாலமன் பாப்பையா: அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
மு. கருணாநிதி: அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

புல்லறிவாண்மை

Wealth • Friendship
#850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu
Alakaiyaa Vaikkap Patum

Translation: To people's \"Yes\" who proffer \"No\" Deemed as ghouls on earth they go

Meaning: He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth

மு. வரதராசனார்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா: இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
மு. கருணாநிதி: ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்