திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 821-830 of 1330

கூடா நட்பு

Wealth • Friendship
#821
சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பு.

Seeritam Kaanin Eridharkup Pattatai
Neraa Nirandhavar Natpu

Translation: The friendship by an enemy shown Is anvil in time, to strike you down

Meaning: The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself

மு. வரதராசனார்: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
சாலமன் பாப்பையா: மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
மு. கருணாநிதி: மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்

கூடா நட்பு

Wealth • Friendship
#822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

Inampondru Inamallaar Kenmai Makalir
Manampola Veru Patum

Translation: Who pretend kinship but are not Their friendship's fickle like woman's heart

Meaning: The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women

மு. வரதராசனார்: இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
சாலமன் பாப்பையா: வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.
மு. கருணாநிதி: உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்

கூடா நட்பு

Wealth • Friendship
#823
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

Palanalla Katrak Kataiththu Mananallar
Aakudhal Maanaark Karidhu

Translation: They may be vast in good studies But heartfelt-love is hard for foes

Meaning: Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart

மு. வரதராசனார்: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா: மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
மு. கருணாநிதி: அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்

கூடா நட்பு

Wealth • Friendship
#824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

Mukaththin Iniya Nakaaa Akaththinnaa
Vanjarai Anjap Patum

Translation: Fear foes whose face has winning smiles Whose heart is full of cunning guiles

Meaning: One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart

மு. வரதராசனார்: முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
சாலமன் பாப்பையா: நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.
மு. கருணாநிதி: சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்

கூடா நட்பு

Wealth • Friendship
#825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

Manaththin Amaiyaa Thavarai Enaiththondrum
Sollinaal Therarpaatru Andru

Translation: Do not trust in what they tell Whose mind with your mind goes ill

Meaning: In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart

மு. வரதராசனார்: மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
சாலமன் பாப்பையா: மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
மு. கருணாநிதி: மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது

கூடா நட்பு

Wealth • Friendship
#826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum

Translation: The words of foes is quickly seen Though they speak like friends in fine

Meaning: Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)

மு. வரதராசனார்: நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
சாலமன் பாப்பையா: நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
மு. கருணாநிதி: பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்

கூடா நட்பு

Wealth • Friendship
#827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

Solvanakkam Onnaarkan Kollarka Vilvanakkam
Theengu Kuriththamai Yaan

Translation: Trust not the humble words of foes Danger darts from bending bows

Meaning: Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes

மு. வரதராசனார்: வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
மு. கருணாநிதி: பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது

கூடா நட்பு

Wealth • Friendship
#828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar
Azhudhakan Neerum Anaiththu

Translation: Adoring hands of foes hide arms Their sobbing tears have lurking harms

Meaning: A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature

மு. வரதராசனார்: பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
சாலமன் பாப்பையா: பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
மு. கருணாநிதி: பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்

கூடா நட்பு

Wealth • Friendship
#829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

Mikachcheydhu Thammellu Vaarai Nakachcheydhu
Natpinul Saappullar Paatru

Translation: In open who praise, at heart despise Cajole and crush them in friendly guise

Meaning: It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart)

மு. வரதராசனார்: புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.
மு. கருணாநிதி: வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்

கூடா நட்பு

Wealth • Friendship
#830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital

Translation: When foes, in time, play friendship's part Feign love on face but not in heart

Meaning: When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)

மு. வரதராசனார்: பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா: நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
மு. கருணாநிதி: பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்