திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 651-660 of 1330

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#651
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

Thunainalam Aakkam Tharuum Vinainalam
Ventiya Ellaan Tharum

Translation: Friendship brings gain; but action pure Does every good thing we desire

Meaning: The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired

மு. வரதராசனார்: ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா: நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
மு. கருணாநிதி: ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

Endrum Oruvudhal Ventum Pukazhotu
Nandri Payavaa Vinai

Translation: Eschew always acts that do not Bring good nor glory on their part

Meaning: Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)

மு. வரதராசனார்: புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
மு. கருணாநிதி: புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

Oodhal Ventum Olimaazhkum Seyvinai
Aaadhum Ennu Mavar

Translation: Those in the world desire for fame Should shun the deed that dims their name

Meaning: Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame)

மு. வரதராசனார்: மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா: உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மு. கருணாநிதி: மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

Itukkan Patinum Ilivandha Seyyaar
Natukkatra Kaatchi Yavar

Translation: Though perils press the faultless wise Shun deeds of mean, shameful device

Meaning: Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers)

மு. வரதராசனார்: அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா: தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
மு. கருணாநிதி: தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

Etrendru Iranguva Seyyarka Seyvaanel
Matranna Seyyaamai Nandru

Translation: Do not wrong act and grieve, \"Alas\" If done, do not repeat it twice

Meaning: Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not

மு. வரதராசனார்: பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா: என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.
மு. கருணாநிதி: `என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க
சான்றோர் பழிக்கும் வினை.

Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka
Saandror Pazhikkum Vinai

Translation: Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers

Meaning: Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)

மு. வரதராசனார்: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா: தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
மு. கருணாநிதி: பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai

Translation: Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice

Meaning: Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful

மு. வரதராசனார்: பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
சாலமன் பாப்பையா: பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
மு. கருணாநிதி: பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam
Mutindhaalum Peezhai Tharum

Translation: Those who dare a forbidden deed Suffer troubles though they succeed

Meaning: The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow

மு. வரதராசனார்: ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
சாலமன் பாப்பையா: வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.
மு. கருணாநிதி: தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#659
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

Azhak Konta Ellaam Azhappom
Izhappinum Pirpayakkum Narpaa Lavai

Translation: Gains from weeping, weeping go Though lost, from good deeds blessings flow

Meaning: All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit

மு. வரதராசனார்: பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்
சாலமன் பாப்பையா: பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.
மு. கருணாநிதி: பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்

வினைத் தூய்மை

Wealth • Minister of State
#660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

Salaththaal Porulseydhe Maarththal Pasuman
Kalaththulneer Peydhireei Yatru

Translation: The wealth gathered in guilty ways Is water poured in wet clay vase

Meaning: (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water

மு. வரதராசனார்: வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா: தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
மு. கருணாநிதி: தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்