திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 481-490 of 1330

காலமறிதல்

Wealth • Royalty
#481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum
Vendharkku Ventum Pozhudhu

Translation: By day the crow defeats the owl Kings need right time their foes to quell

Meaning: A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time

மு. வரதராசனார்: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
சாலமன் பாப்பையா: தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.
மு. கருணாநிதி: பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

காலமறிதல்

Wealth • Royalty
#482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru

Translation: Well-ordered seasoned act is cord That fortune binds in bon accord

Meaning: Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)

மு. வரதராசனார்: காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
சாலமன் பாப்பையா: காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
மு. கருணாநிதி: காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்

காலமறிதல்

Wealth • Royalty
#483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.

Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin

Translation: What is hard for him who acts With proper means and time and tacts?

Meaning: Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

மு. வரதராசனார்: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
சாலமன் பாப்பையா: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?
மு. கருணாநிதி: தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை

காலமறிதல்

Wealth • Royalty
#484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

Gnaalam Karudhinung Kaikootung Kaalam
Karudhi Itaththaar Seyin

Translation: Choose proper time and act and place Even the world you win with ease

Meaning: Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place

மு. வரதராசனார்: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
சாலமன் பாப்பையா: ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
மு. கருணாநிதி: உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்

காலமறிதல்

Wealth • Royalty
#485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

Kaalam Karudhi Iruppar Kalangaadhu
Gnaalam Karudhu Pavar

Translation: Who want to win the world sublime Wait unruffled biding their time

Meaning: They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world

மு. வரதராசனார்: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
சாலமன் பாப்பையா: பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
மு. கருணாநிதி: கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்

காலமறிதல்

Wealth • Royalty
#486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

Ookka Mutaiyaan Otukkam Porudhakar
Thaakkarkup Perun Thakaiththu

Translation: By self-restraint stalwarts keep fit Like rams retreating but to butt

Meaning: The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt

மு. வரதராசனார்: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
சாலமன் பாப்பையா: ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
மு. கருணாநிதி: கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்

காலமறிதல்

Wealth • Royalty
#487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

Pollena Aange Puramveraar Kaalampaarththu
Ulverppar Olli Yavar

Translation: The wise jut not their vital fire They watch their time with hidden ire

Meaning: The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within

மு. வரதராசனார்: அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
சாலமன் பாப்பையா: தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.
மு. கருணாநிதி: பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்

காலமறிதல்

Wealth • Royalty
#488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

Serunaraik Kaanin Sumakka Iruvarai
Kaanin Kizhakkaam Thalai

Translation: Bear with hostiles when you meet them Fell down their head in fateful time

Meaning: If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low

மு. வரதராசனார்: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
சாலமன் பாப்பையா: பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.
மு. கருணாநிதி: பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்

காலமறிதல்

Wealth • Royalty
#489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye
Seydhar Kariya Seyal

Translation: When comes the season ripe and rare Dare and do hard things then and there

Meaning: If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)

மு. வரதராசனார்: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா: அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.
மு. கருணாநிதி: கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்

காலமறிதல்

Wealth • Royalty
#490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu

Translation: In waiting time feign peace like stork In fighting time strike like its peck

Meaning: At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity

மு. வரதராசனார்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.
மு. கருணாநிதி: காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்