திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 441-450 of 1330

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

Aranarindhu Mooththa Arivutaiyaar Kenmai
Thiranarindhu Therndhu Kolal

Translation: Weigh their worth and friendship gain Of men of virtue and mature brain

Meaning: Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge

மு. வரதராசனார்: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா: அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
மு. கருணாநிதி: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

Utranoi Neekki Uraaamai Murkaakkum
Petriyaarp Penik Kolal

Translation: Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill

Meaning: Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen

மு. வரதராசனார்: வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா: வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.
மு. கருணாநிதி: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

Ariyavatru Lellaam Aridhe Periyaaraip
Penith Thamaraak Kolal

Translation: Honour and have the great your own Is rarest of the rare things known

Meaning: To cherish great men and make them his own, is the most difficult of all difficult things

மு. வரதராசனார்: பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
சாலமன் பாப்பையா: துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
மு. கருணாநிதி: பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

Thammir Periyaar Thamaraa Ozhukudhal
Vanmaiyu Lellaan Thalai

Translation: To have betters as intimates Power of all powers promotes

Meaning: So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest

மு. வரதராசனார்: தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா: அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
மு. கருணாநிதி: அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan
Soozhvaaraik Soozhndhu Kolal

Translation: Ministers are the monarch's eyes Round him should be the right and wise

Meaning: As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them

மு. வரதராசனார்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா: தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.
மு. கருணாநிதி: கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich
Chetraar Seyakkitandha Thil

Translation: To move with worthy friends who knows Has none to fear from frightful foes

Meaning: There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men

மு. வரதராசனார்: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா: தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
மு. கருணாநிதி: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare
Ketukkun Thakaimai Yavar

Translation: No foe can foil his powers whose friends reprove him when he errs

Meaning: Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?

மு. வரதராசனார்: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா: தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?
மு. கருணாநிதி: இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum

Translation: The careless king whom none reproves Ruins himself sans harmful foes

Meaning: The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him

மு. வரதராசனார்: கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
சாலமன் பாப்பையா: தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
மு. கருணாநிதி: குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#449
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch
Aarpilaark Killai Nilai

Translation: No capital, no gain in trade No prop secure sans good comrade

Meaning: There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to

மு. வரதராசனார்: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
சாலமன் பாப்பையா: முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.
மு. கருணாநிதி: கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்

பெரியாரைத் துணைக்கோடல்

Wealth • Royalty
#450
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

Pallaar Pakai Kolalir Paththatuththa
Theemaiththe Nallaar Thotarkai Vital

Translation: To give up good friends is ten times worse Than being hated by countless foes

Meaning: It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many

மு. வரதராசனார்: நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா: துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
மு. கருணாநிதி: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்