திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 421-430 of 1330

அறிவுடைமை

Wealth • Royalty
#421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum
Ullazhikka Laakaa Aran

Translation: Wisdom's weapon wards off all woes It is a fort defying foes

Meaning: Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy

மு. வரதராசனார்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
சாலமன் பாப்பையா: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
மு. கருணாநிதி: பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்

அறிவுடைமை

Wealth • Royalty
#422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu

Translation: Wisdom checks the straying senses Expels evils, impels goodness

Meaning: Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom

மு. வரதராசனார்: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா: மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
மு. கருணாநிதி: மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்

அறிவுடைமை

Wealth • Royalty
#423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul
Meypporul Kaanpa Tharivu

Translation: To grasp the Truth from everywhere From everyone is wisdom fair

Meaning: To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom

மு. வரதராசனார்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா: எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
மு. கருணாநிதி: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

அறிவுடைமை

Wealth • Royalty
#424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

Enporula Vaakach Chelachchollith Thaanpirarvaai
Nunporul Kaanpa Tharivu

Translation: Speaking out thoughts in clear trends Wisdom subtle sense comprehends

Meaning: To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom

மு. வரதராசனார்: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
சாலமன் பாப்பையா: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
மு. கருணாநிதி: நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்

அறிவுடைமை

Wealth • Royalty
#425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

Ulakam Thazheeiya Thotpam Malardhalum
Koompalum Illa Tharivu

Translation: The wise-world the wise befriend They bloom nor gloom, equal in mind

Meaning: To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower)

மு. வரதராசனார்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
சாலமன் பாப்பையா: உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
மு. கருணாநிதி: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்

அறிவுடைமை

Wealth • Royalty
#426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

Evva Thuraivadhu Ulakam Ulakaththotu
Avva Thuraiva Tharivu

Translation: As moves the world so move the wise In tune with changing times and ways

Meaning: To live as the world lives, is wisdom

மு. வரதராசனார்: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா: உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
மு. கருணாநிதி: உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

அறிவுடைமை

Wealth • Royalty
#427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar

Translation: The wise foresee what is to come The unwise lack in that wisdom

Meaning: The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise

மு. வரதராசனார்: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
சாலமன் பாப்பையா: அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
மு. கருணாநிதி: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

அறிவுடைமை

Wealth • Royalty
#428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil

Translation: Fear the frightful and act wisely Not to fear the frightful's folly

Meaning: Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared

மு. வரதராசனார்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா: பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
மு. கருணாநிதி: அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்

அறிவுடைமை

Wealth • Royalty
#429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

Edhiradhaak Kaakkum Arivinaark Killai
Adhira Varuvadhor Noi

Translation: No frightful evil shocks the wise Who guard themselves against surprise

Meaning: No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils

மு. வரதராசனார்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா: நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
மு. கருணாநிதி: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது

அறிவுடைமை

Wealth • Royalty
#430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar
Ennutaiya Renum Ilar

Translation: Who have wisdom they are all full Whatev'r they own, misfits are nil

Meaning: Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing

மு. வரதராசனார்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா: ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
மு. கருணாநிதி: அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை