திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 401-410 of 1330

கல்லாமை

Wealth • Royalty
#401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

Arangindri Vattaati Yatre Nirampiya
Noolindrik Kotti Kolal

Translation: Like play of chess on squareless board Vain is imperfect loreless word

Meaning: To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares

மு. வரதராசனார்: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
சாலமன் பாப்பையா: அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
மு. கருணாநிதி: நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்

கல்லாமை

Wealth • Royalty
#402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum
Illaadhaal Penkaamur Ratru

Translation: Unlearned man aspiring speech Is breastless lady's love-approach

Meaning: The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood

மு. வரதராசனார்: (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
சாலமன் பாப்பையா: படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
மு. கருணாநிதி: கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது

கல்லாமை

Wealth • Royalty
#403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin

Translation: Ev'n unread men are good and wise If before the wise, they hold their peace

Meaning: The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned

மு. வரதராசனார்: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
சாலமன் பாப்பையா: கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
மு. கருணாநிதி: கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்

கல்லாமை

Wealth • Royalty
#404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar

Translation: The unread's wit though excellent Is not valued by the savant

Meaning: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

மு. வரதராசனார்: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
மு. கருணாநிதி: கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

கல்லாமை

Wealth • Royalty
#405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu
Sollaatach Chorvu Patum

Translation: A man untaught when speech he vaunts Sadly fails before savants

Meaning: The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of

மு. வரதராசனார்: கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
சாலமன் பாப்பையா: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
மு. கருணாநிதி: கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்

கல்லாமை

Wealth • Royalty
#406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

Ularennum Maaththiraiyar Allaal Payavaak
Kalaranaiyar Kallaa Thavar

Translation: People speak of untaught minds \"They just exist like barren lands\"

Meaning: The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist

மு. வரதராசனார்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா: படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
மு. கருணாநிதி: கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்

கல்லாமை

Wealth • Royalty
#407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam
Manmaan Punaipaavai Yatru

Translation: Like painted clay-doll is his show Grand subtle lore who fails to know

Meaning: The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll

மு. வரதராசனார்: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
சாலமன் பாப்பையா: நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
மு. கருணாநிதி: அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்

கல்லாமை

Wealth • Royalty
#408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட் ட திரு.

Nallaarkan Patta Varumaiyin Innaadhe
Kallaarkan Patta Thiru

Translation: Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse

Meaning: Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned

மு. வரதராசனார்: கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
சாலமன் பாப்பையா: படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
மு. கருணாநிதி: முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்

கல்லாமை

Wealth • Royalty
#409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum
Katraar Anaiththilar Paatu

Translation: Lower are fools of higher birth Than low-born men of learning's worth

Meaning: The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste

மு. வரதராசனார்: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
சாலமன் பாப்பையா: படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
மு. கருணாநிதி: கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்

கல்லாமை

Wealth • Royalty
#410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

Vilangotu Makkal Anaiyar Ilangunool
Katraarotu Enai Yavar

Translation: Like beasts before men, dunces are Before scholars of shining lore

Meaning: As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works

மு. வரதராசனார்: அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
சாலமன் பாப்பையா: விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.
மு. கருணாநிதி: மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு