திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 361-370 of 1330

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

Avaaenpa Ellaa Uyirkkum Enj
Gnaandrum Thavaaap Pirappeenum Viththu

Translation: Desire to all, always is seed From which ceaseless births proceed

Meaning: (The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire

மு. வரதராசனார்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
சாலமன் பாப்பையா: எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
மு. கருணாநிதி: ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum

Translation: If long thou must, long for non-birth It comes by longing no more for earth

Meaning: If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire

மு. வரதராசனார்: ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா: பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
மு. கருணாநிதி: விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il

Translation: No such wealth is here and there As peerless wealth of non-desire

Meaning: There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it

மு. வரதராசனார்: அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
சாலமன் பாப்பையா: எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.
மு. கருணாநிதி: தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

Thoouymai Enpadhu Avaavinmai Matradhu
Vaaaimai Venta Varum

Translation: To nothing crave is purity That is the fruit of verity

Meaning: Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth

மு. வரதராசனார்: தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா: மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.
மு. கருணாநிதி: தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

Atravar Enpaar Avaaatraar Matraiyaar
Atraaka Atradhu Ilar

Translation: The free are those who desire not The rest not free in bonds are caught

Meaning: They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free

மு. வரதராசனார்: பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா: ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
மு. கருணாநிதி: ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

Anjuva Thorum Arane Oruvanai
Vanjippa Thorum Avaa

Translation: Dread desire; Virtue is there To every soul desire is snare!

Meaning: It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him

மு. வரதராசனார்: ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
சாலமன் பாப்பையா: ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.
மு. கருணாநிதி: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

Avaavinai Aatra Aruppin Thavaavinai
Thaanventu Maatraan Varum

Translation: Destroy desire; deliverance Comes as much as you aspire hence

Meaning: If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them

மு. வரதராசனார்: ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
சாலமன் பாப்பையா: ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
மு. கருணாநிதி: கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel
Thavaaadhu Menmel Varum

Translation: Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends

Meaning: There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more

மு. வரதராசனார்: அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
சாலமன் பாப்பையா: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
மு. கருணாநிதி: ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin

Translation: Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy

Meaning: Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed

மு. வரதராசனார்: அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சாலமன் பாப்பையா: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
மு. கருணாநிதி: பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்

அவா அறுத்தல்

Virtue • Ascetic Virtue
#370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye
Peraa Iyarkai Tharum

Translation: Off with desire insatiate You gain the native blissful state

Meaning: The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed

மு. வரதராசனார்: ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
சாலமன் பாப்பையா: ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.
மு. கருணாநிதி: இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்