திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 351-360 of 1330

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu

Translation: That error entails ignoble birth Which deems vain things as things of worth

Meaning: Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real

மு. வரதராசனார்: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
சாலமன் பாப்பையா: பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
மு. கருணாநிதி: பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

Irulneengi Inpam Payakkum Marulneengi
Maasaru Kaatchi Yavarkku

Translation: Men of spotless pure insight Enjoy delight devoid of night

Meaning: A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)

மு. வரதராசனார்: மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
சாலமன் பாப்பையா: மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.
மு. கருணாநிதி: மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin
Vaanam Naniya Thutaiththu

Translation: To doubtless minds whose heart is clear More than earth heaven is near

Meaning: Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt

மு. வரதராசனார்: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா: சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.
மு. கருணாநிதி: ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

Aiyunarvu Eydhiyak Kannum Payamindre
Meyyunarvu Illaa Thavarkku

Translation: Knowledge of five senses is vain Without knowing the Truth within

Meaning: Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things

மு. வரதராசனார்: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா: மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
மு. கருணாநிதி: உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Epporul Eththanmaith Thaayinum Apporul
Meypporul Kaanpadhu Arivu

Translation: Knowledge is truth of things to find In every case of every kind

Meaning: (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing

மு. வரதராசனார்: எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.
சாலமன் பாப்பையா: எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
மு. கருணாநிதி: வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

Katreentu Meypporul Kantaar Thalaippatuvar
Matreentu Vaaraa Neri

Translation: Who learn and here the Truth discern Enter the path of non-return

Meaning: They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world

மு. வரதராசனார்: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
சாலமன் பாப்பையா: பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
மு. கருணாநிதி: துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap
Perththulla Ventaa Pirappu

Translation: One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth

Meaning: Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being

மு. வரதராசனார்: ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
சாலமன் பாப்பையா: பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.
மு. கருணாநிதி: உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

Pirappennum Pedhaimai Neengach Chirappennum
Semporul Kaanpadhu Arivu

Translation: It is knowledge to know Self-Truth And remove the folly of birth

Meaning: True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven

மு. வரதராசனார்: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
சாலமன் பாப்பையா: பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
மு. கருணாநிதி: அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

Saarpunarndhu Saarpu Ketaozhukin Matrazhiththuch
Chaardharaa Saardharu Noi

Translation: Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage

Meaning: He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)

மு. வரதராசனார்: எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
சாலமன் பாப்பையா: எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.
மு. கருணாநிதி: துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்

மெய்யுணர்தல்

Virtue • Ascetic Virtue
#360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi

Translation: Woes expire when lust, wrath, folly Expire even to name, fully

Meaning: If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)

மு. வரதராசனார்: விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
சாலமன் பாப்பையா: விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.
மு. கருணாநிதி: விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்