திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 331-340 of 1330

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

Nillaadha Vatrai Nilaiyina Endrunarum
Pullari Vaanmai Katai

Translation: The worst of follies it is told The fleeting as lasting to hold

Meaning: That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)

மு. வரதராசனார்: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
சாலமன் பாப்பையா: நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
மு. கருணாநிதி: நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#332
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

Kooththaattu Avaik Kuzhaath Thatre
Perunjelvam Pokkum Adhuvilin Thatru

Translation: Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes

Meaning: The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly

மு. வரதராசனார்: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
சாலமன் பாப்பையா: நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.
மு. கருணாநிதி: சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal

Translation: Wealth wanes away; but when it comes Take care to do enduring things

Meaning: Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable

மு. வரதராசனார்: செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா: நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
மு. கருணாநிதி: நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

Naalena Ondrupor Kaatti Uyir
Eerum Vaaladhu Unarvaarp Perin

Translation: The showy day is but a saw Your life, know that, to file and gnaw

Meaning: Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life

மு. வரதராசனார்: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
சாலமன் பாப்பையா: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.
மு. கருணாநிதி: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai
Mersendru Seyyap Patum

Translation: Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes

Meaning: Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent

மு. வரதராசனார்: நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா: நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
மு. கருணாநிதி: வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku

Translation: One was yesterday; not today!

Meaning: This world possesses the greatness that one who yesterday was is not today

மு. வரதராசனார்: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
சாலமன் பாப்பையா: நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
மு. கருணாநிதி: இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa
Kotiyum Alla Pala

Translation: Man knows not his next moment On crores of things he is intent

Meaning: Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment

மு. வரதராசனார்: அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
சாலமன் பாப்பையா: உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
மு. கருணாநிதி: ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#338
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

Kutampai Thaniththu Ozhiyap Pulparan
Thatre Utampotu Uyiritai Natpu

Translation: The soul from body any day Like bird from egg-shell flies away

Meaning: The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty

மு. வரதராசனார்: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
மு. கருணாநிதி: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

Urangu Vadhupolunj Chaakkaatu Urangi
Vizhippadhu Polum Pirappu

Translation: Death is like a slumber deep And birth like waking from that sleep

Meaning: Death is like sleep; birth is like awaking from it

மு. வரதராசனார்: இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
சாலமன் பாப்பையா: உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
மு. கருணாநிதி: நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு

நிலையாமை

Virtue • Ascetic Virtue
#340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku

Translation: The life berthed in this body shows A fixed home it never knows

Meaning: It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home

மு. வரதராசனார்: (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
சாலமன் பாப்பையா: உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
மு. கருணாநிதி: உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது