திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 221-230 of 1330

ஈகை

Virtue • Domestic Virtue
#221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam
Kuriyedhirppai Neera Thutaiththu

Translation: To give the poor is charity The rest is loan and vanity

Meaning: To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return

மு. வரதராசனார்: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா: ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
மு. கருணாநிதி: இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்

ஈகை

Virtue • Domestic Virtue
#222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru

Translation: To beg is bad e'en from the good To give is good, were heaven forbid

Meaning: To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven

மு. வரதராசனார்: பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
சாலமன் பாப்பையா: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.
மு. கருணாநிதி: பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்

ஈகை

Virtue • Domestic Virtue
#223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

Ilanennum Evvam Uraiyaamai Eedhal
Kulanutaiyaan Kanne Yula

Translation: No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth

Meaning: (Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth

மு. வரதராசனார்: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
சாலமன் பாப்பையா: ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.
மு. கருணாநிதி: தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்

ஈகை

Virtue • Domestic Virtue
#224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu

Translation: The cry for alms is painful sight Until the giver sees him bright

Meaning: To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance

மு. வரதராசனார்: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
சாலமன் பாப்பையா: கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
மு. கருணாநிதி: ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்

ஈகை

Virtue • Domestic Virtue
#225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

Aatruvaar Aatral Pasiaatral Appasiyai
Maatruvaar Aatralin Pin

Translation: Higher's power which hunger cures Than that of penance which endures

Meaning: The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)

மு. வரதராசனார்: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
சாலமன் பாப்பையா: வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
மு. கருணாநிதி: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்

ஈகை

Virtue • Domestic Virtue
#226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi

Translation: Drive from the poor their gnawing pains If room you seek to store your gains

Meaning: The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth

மு. வரதராசனார்: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
சாலமன் பாப்பையா: ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
மு. கருணாநிதி: பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்

ஈகை

Virtue • Domestic Virtue
#227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

Paaththoon Mareei Yavanaip Pasiyennum
Theeppini Theental Aridhu

Translation: Who shares his food with those who need Hunger shall not harm his creed

Meaning: The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others

மு. வரதராசனார்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
சாலமன் பாப்பையா: பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
மு. கருணாநிதி: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை

ஈகை

Virtue • Domestic Virtue
#228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar

Translation: The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails

Meaning: Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?

மு. வரதராசனார்: தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
சாலமன் பாப்பையா: இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?
மு. கருணாநிதி: ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?

ஈகை

Virtue • Domestic Virtue
#229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaame Thamiyar Unal

Translation: Worse than begging is that boarding Alone what one's greed is hoarding

Meaning: Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more

மு. வரதராசனார்: பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
சாலமன் பாப்பையா: பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
மு. கருணாநிதி: பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது

ஈகை

Virtue • Domestic Virtue
#230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai

Translation: Nothing is more painful than death Yet more is pain of giftless dearth

Meaning: Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

மு. வரதராசனார்: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
சாலமன் பாப்பையா: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
மு. கருணாநிதி: சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது