திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 191-200 of 1330

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

Pallaar Muniyap Payanila Solluvaan
Ellaarum Ellap Patum

Translation: With silly words who insults all Is held in contempt as banal

Meaning: He who to the disgust of many speaks useless things will be despised by all

மு. வரதராசனார்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன் பாப்பையா: பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
மு. கருணாநிதி: பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.

Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seydhalir Reedhu

Translation: Vain talk before many is worse Than doing to friends deeds adverse

Meaning: To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends

மு. வரதராசனார்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா: ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
மு. கருணாநிதி: பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai

Translation: The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name

Meaning: That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

மு. வரதராசனார்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா: பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
மு. கருணாநிதி: பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap
Panpilsol Pallaa Rakaththu

Translation: Vain words before an assembly Will make all gains and goodness flee

Meaning: The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,

மு. வரதராசனார்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சாலமன் பாப்பையா: பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
மு. கருணாநிதி: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin

Translation: Glory and grace will go away When savants silly nonsense say

Meaning: If the good speak vain words their eminence and excellence will leave them

மு. வரதராசனார்: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
மு. கருணாநிதி: நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#196
பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

Payanil Sol Paaraattu Vaanai
Makanenal Makkat Padhati Yenal

Translation: Call him a human chaff who prides Himself in weightless idle words

Meaning: Call not him a man who parades forth his empty words Call him the chaff of men

மு. வரதராசனார்: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா: பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
மு. கருணாநிதி: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

Nayanila Sollinunj Cholluka Saandror
Payanila Sollaamai Nandru

Translation: Let not men of worth vainly quack Even if they would roughly speak

Meaning: Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things

மு. வரதராசனார்: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா: நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
மு. கருணாநிதி: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol

Translation: The wise who weigh the worth refrain From words that have no grain and brain

Meaning: The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

மு. வரதராசனார்: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
சாலமன் பாப்பையா: அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
மு. கருணாநிதி: அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar

Translation: The wise of spotless self-vision Slip not to silly words-mention

Meaning: Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not

மு. வரதராசனார்: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா: மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
மு. கருணாநிதி: மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்

பயனில சொல்லாமை

Virtue • Domestic Virtue
#200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol

Translation: To purpose speak the fruitful word And never indulge in useless load

Meaning: Speak what is useful, and speak not useless words

மு. வரதராசனார்: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
சாலமன் பாப்பையா: சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
மு. கருணாநிதி: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்