திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1301-1310 of 1330

புலவி

Love • The Post-marital love
#1301
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

Pullaa Thiraaap Pulaththai Avar
Urum Allalnoi Kaankam Siridhu

Translation: Feign sulk; embrace him not so that We can see his distress a bit

Meaning: Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not

மு. வரதராசனார்: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
சாலமன் பாப்பையா: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
மு. கருணாநிதி: ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக

புலவி

Love • The Post-marital love
#1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

Uppamain Thatraal Pulavi Adhusiridhu
Mikkatraal Neela Vital

Translation: Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband

Meaning: A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much

மு. வரதராசனார்: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
சாலமன் பாப்பையா: உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.
மு. கருணாநிதி: ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்

புலவி

Love • The Post-marital love
#1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip
Pulandhaaraip Pullaa Vital

Translation: To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved

Meaning: For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony

மு. வரதராசனார்: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
சாலமன் பாப்பையா: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.
மு. கருணாநிதி: ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்

புலவி

Love • The Post-marital love
#1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru

Translation: To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself

Meaning: Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root

மு. வரதராசனார்: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
சாலமன் பாப்பையா: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
மு. கருணாநிதி: ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்

புலவி

Love • The Post-marital love
#1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

Nalaththakai Nallavarkku Eer Pulaththakai
Pooanna Kannaar Akaththu

Translation: Pouting of flower-eyed has To pure good mates a lovely grace

Meaning: An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands

மு. வரதராசனார்: நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
சாலமன் பாப்பையா: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
மு. கருணாநிதி: மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்

புலவி

Love • The Post-marital love
#1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

Thuniyum Pulaviyum Illaayin Kaamam
Kaniyum Karukkaayum Atru

Translation: Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits

Meaning: Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit

மு. வரதராசனார்: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
சாலமன் பாப்பையா: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
மு. கருணாநிதி: பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்

புலவி

Love • The Post-marital love
#1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.

Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva Thandru Kol Endru

Translation: \"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt

Meaning: The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike

மு. வரதராசனார்: கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா: இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
மு. கருணாநிதி: கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு

புலவி

Love • The Post-marital love
#1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum
Kaadhalar Illaa Vazhi

Translation: What's the good of grieving lament When concious lover is not present?

Meaning: What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?

மு. வரதராசனார்: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
சாலமன் பாப்பையா: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?
மு. கருணாநிதி: நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

புலவி

Love • The Post-marital love
#1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu

Translation: Water delights in a shady grove And sulking in souls of psychic love

Meaning: Like water in the shade, dislike is delicious only in those who love

மு. வரதராசனார்: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
சாலமன் பாப்பையா: நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
மு. கருணாநிதி: நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்

புலவி

Love • The Post-marital love
#1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

Ootal Unanga Vituvaarotu Ennenjam
Kootuvem Enpadhu Avaa

Translation: My heart athirst would still unite With her who me in sulking left!

Meaning: It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike

மு. வரதராசனார்: ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
சாலமன் பாப்பையா: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
மு. கருணாநிதி: ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்