திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1291-1300 of 1330

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

Avarnenju Avarkkaadhal Kantum Evannenje
Neeemakku Aakaa Thadhu

Translation: You see, his heart is his alone; Why not my heart be all my own?

Meaning: O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

மு. வரதராசனார்: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?
சாலமன் பாப்பையா: நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?
மு. கருணாநிதி: நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju

Translation: O heart, you see how he slights me Yet you clasp him as if friendly

Meaning: O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

மு. வரதராசனார்: என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
சாலமன் பாப்பையா: என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!
மு. கருணாநிதி: நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

Kettaarkku Nattaaril Enpadho Nenjenee
Pettaangu Avarpin Selal

Translation: You follow him at will Is it \"The fallen have no friends\" my heart?

Meaning: O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

மு. வரதராசனார்: நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?
சாலமன் பாப்பையா: நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?
மு. கருணாநிதி: நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

Inianna Ninnotu Soozhvaaryaar Nenje
Thuniseydhu Thuvvaaikaan Matru

Translation: You won't sulk first and then submit Who will then consult you, my heart?

Meaning: O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?

மு. வரதராசனார்: நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?
சாலமன் பாப்பையா: நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.
மு. கருணாநிதி: நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

Peraaamai Anjum Perinpirivu Anjum
Araaa Itumpaiththen Nenju

Translation: Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain

Meaning: My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow

மு. வரதராசனார்: ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
சாலமன் பாப்பையா: என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.
மு. கருணாநிதி: என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju

Translation: My itching mind eats me anon As I muse on him all alone

Meaning: My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude

மு. வரதராசனார்: காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
சாலமன் பாப்பையா: காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
மு. கருணாநிதி: காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

Naanum Marandhen Avarmarak Kallaaen
Maanaa Matanenjir Pattu

Translation: I forget shame but not his thought In mean foolish mind I'm caught

Meaning: I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him

மு. வரதராசனார்: காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
சாலமன் பாப்பையா: தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
மு. கருணாநிதி: அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

Ellin Ilivaamendru Enni Avardhiram
Ullum Uyirkkaadhal Nenju

Translation: My heart living in love of him Hails his glory ignoring blame

Meaning: My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him

மு. வரதராசனார்: உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.
சாலமன் பாப்பையா: உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.
மு. கருணாநிதி: பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya
Nenjan Thunaiyal Vazhi

Translation: Who support a man in grief If lover's heart denies relief?

Meaning: Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

மு. வரதராசனார்: ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?
சாலமன் பாப்பையா: ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?
மு. கருணாநிதி: துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

நெஞ்சொடு புலத்தல்

Love • The Post-marital love
#1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya
Nenjam Thamaral Vazhi

Translation: Why wonder if strangers disown When one's own heart is not his own?

Meaning: It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger

மு. வரதராசனார்: ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
சாலமன் பாப்பையா: நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
மு. கருணாநிதி: நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்