திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1281-1290 of 1330

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Ullak Kaliththalum Kaana Makizhdhalum
Kallukkil Kaamaththir Kuntu

Translation: Rapture at thought and joy when seen Belong to love and not to wine

Meaning: To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust

மு. வரதராசனார்: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு
சாலமன் பாப்பையா: நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
மு. கருணாநிதி: மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின்.

Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith
Thunaiyum Kaamam Niraiya Varin

Translation: When passion grows palmyra-tall Sulking is wrong though millet-small

Meaning: If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet

மு. வரதராசனார்: காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
மு. கருணாநிதி: பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan

Translation: Though slighting me he acts his will My restless eyes would see him still

Meaning: Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him

மு. வரதராசனார்: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
சாலமன் பாப்பையா: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
மு. கருணாநிதி: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu
Kootarkan Sendradhu En Nenju

Translation: Huff I would, maid, but I forget; And leap to embrace him direct

Meaning: My heart, forgetting all, could not its love restrain

மு. வரதராசனார்: தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
சாலமன் பாப்பையா: தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.
மு. கருணாநிதி: ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan
Pazhikaanen Kanta Itaththu

Translation: When close I see not lord's blemish Like eyes that see not painter's brush

Meaning: Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him

மு. வரதராசனார்: மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
சாலமன் பாப்பையா: முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.
மு. கருணாநிதி: கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai

Translation: When he's with me I see not fault And nought but fault when he is not

Meaning: When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults

மு. வரதராசனார்: காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
சாலமன் பாப்பையா: கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
மு. கருணாநிதி: அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

Uyththal Arindhu Punalpaai Pavarepol
Poiththal Arindhen Pulandhu

Translation: To leap in stream which carries off When lord is close to feign a huff

Meaning: Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?

மு. வரதராசனார்: வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?
சாலமன் பாப்பையா: தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?
மு. கருணாநிதி: வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk
Kallatre Kalvanin Maarpu

Translation: Like wine to addicts that does disgrace Your breast, O thief, is for my embrace!

Meaning: O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace

மு. வரதராசனார்: கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.
சாலமன் பாப்பையா: வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.
மு. கருணாநிதி: என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

Malarinum Mellidhu Kaamam Silaradhan
Sevvi Thalaippatu Vaar

Translation: Flower-soft is love; a few alone Know its delicacy so fine

Meaning: Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature

மு. வரதராசனார்: காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
சாலமன் பாப்பையா: காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே
மு. கருணாநிதி: காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

புணர்ச்சி விதும்பல்

Love • The Post-marital love
#1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

Kannin Thuniththe Kalanginaal Pulludhal
Enninum Thaanvidhup Putru

Translation: She feigned dislike awhile but flew Faster for embrace than I do

Meaning: She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own

மு. வரதராசனார்: கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
சாலமன் பாப்பையா: தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்
மு. கருணாநிதி: விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்