திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1221-1230 of 1330

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

Maalaiyo Allai Manandhaar Uyirunnum
Velainee Vaazhi Pozhudhu

Translation: Bless you! you are not eventide But killing dart to wedded bride!

Meaning: Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women

மு. வரதராசனார்: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
சாலமன் பாப்பையா: பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.
மு. கருணாநிதி: நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

Punkannai Vaazhi Marulmaalai Emkelpol
Vankanna Thonin Thunai

Translation: Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim!

Meaning: A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mine

மு. வரதராசனார்: மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
சாலமன் பாப்பையா: பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?
மு. கருணாநிதி: மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith
Thunpam Valara Varum

Translation: Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain

Meaning: The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow

மு. வரதராசனார்: பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
சாலமன் பாப்பையா: அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.
மு. கருணாநிதி: பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum

Translation: Lover away, comes eventide Like slayer to field of homicide

Meaning: In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter

மு. வரதராசனார்: காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
சாலமன் பாப்பையா: அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.
மு. கருணாநிதி: காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?

Kaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan
Maalaikkuch Cheydha Pakai?

Translation: What good have I done to morning And what evil to this evening?

Meaning: O eve, why art thou foe! thou dost renew my grief

மு. வரதராசனார்: யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
சாலமன் பாப்பையா: காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?
மு. கருணாநிதி: மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

Maalainoi Seydhal Manandhaar Akalaadha
Kaalai Arindha Thilen

Translation: Evening pangs I have not known When my lord nev'r left me alone

Meaning: Previous to my husband's departure, I know not the painful nature of evening

மு. வரதராசனார்: மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
சாலமன் பாப்பையா: முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.
மு. கருணாநிதி: மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi

Translation: Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay

Meaning: This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening

மு. வரதராசனார்: இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா: காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
மு. கருணாநிதி: காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan
Kuzhalpolum Kollum Patai

Translation: A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart

Meaning: The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)

மு. வரதராசனார்: ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.
சாலமன் பாப்பையா: முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
மு. கருணாநிதி: காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu
Maalai Patardharum Pozhdhu

Translation: Deluding eve if it prolongs The whole town will suffer love-pangs

Meaning: When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow

மு. வரதராசனார்: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
சாலமன் பாப்பையா: இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.
மு. கருணாநிதி: என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது

பொழுதுகண்டு இரங்கல்

Love • The Post-marital love
#1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

Porulmaalai Yaalarai Ulli Marulmaalai
Maayumen Maayaa Uyir

Translation: Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth

Meaning: My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth

மு. வரதராசனார்: ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
சாலமன் பாப்பையா: அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
மு. கருணாநிதி: பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது