திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1201-1210 of 1330

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu

Translation: Love is sweeter than wine; for vast Is its delight at very thought

Meaning: Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight

மு. வரதராசனார்: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா: முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.
மு. கருணாநிதி: உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1202
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar
Ninaippa Varuvadhondru El

Translation: Pains are off at the lover's thought In all aspects this love is sweet

Meaning: Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful

மு. வரதராசனார்: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
சாலமன் பாப்பையா: நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
மு. கருணாநிதி: விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Ketum

Translation: To sneeze I tried hence but could not Me he tried to think but did not

Meaning: I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not

மு. வரதராசனார்: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
சாலமன் பாப்பையா: எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?
மு. கருணாநிதி: வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu
Oo Ulare Avar

Translation: Have I a place within his heart? Ah from mine he will never depart

Meaning: He continues to abide in my soul, do I likewise abide in his ?

மு. வரதராசனார்: எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?
சாலமன் பாப்பையா: என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?
மு. கருணாநிதி: என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol
Emnenjaththu Ovaa Varal

Translation: Shame! My heart often he enters Banning me entry into his

Meaning: He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine

மு. வரதராசனார்: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
சாலமன் பாப்பையா: தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?
மு. கருணாநிதி: அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்
உற்றநாள் உள்ள உளேன்.

Matriyaan Ennulen Manno Avaroti
Yaan Utranaal Ulla Ulen

Translation: Beyond the thought of life with him What else of life can I presume?

Meaning: I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

மு. வரதராசனார்: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
சாலமன் பாப்பையா: அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?
மு. கருணாநிதி: நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum

Translation: What will happen if I forget When his memory burns my heart?

Meaning: I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

மு. வரதராசனார்: ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
சாலமன் பாப்பையா: அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?
மு. கருணாநிதி: மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu

Translation: I bring him to ceaseless memory He chides not; and thus honours me

Meaning: He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved

மு. வரதராசனார்: காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
சாலமன் பாப்பையா: அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!
மு. கருணாநிதி: எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

Viliyumen Innuyir Verallam Enpaar
Aliyinmai Aatra Ninaindhu

Translation: Dear life ebbs away by thought Of him who said we are one heart

Meaning: My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different

மு. வரதராசனார்: நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
சாலமன் பாப்பையா: நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
மு. கருணாநிதி: ``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது

நினைந்தவர் புலம்பல்

Love • The Post-marital love
#1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

Vitaaadhu Sendraaraik Kanninaal Kaanap
Pataaadhi Vaazhi Madhi

Translation: Hail moon! Set not so that I find Him who left me but not my mind

Meaning: May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul

மு. வரதராசனார்: தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
சாலமன் பாப்பையா: திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
மு. கருணாநிதி: நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக