திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1191-1200 of 1330

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

Thaamveezhvaar Thamveezhap Petravar Petraare
Kaamaththuk Kaazhil Kani

Translation: Stoneless fruit of love they have Who are beloved by those they love

Meaning: The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?

மு. வரதராசனார்: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
சாலமன் பாப்பையா: தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.
மு. கருணாநிதி: தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள஧ க்கும் அளி.

Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku
Veezhvaar Ala� Kkum Ali

Translation: The lover-and-beloved's self-givings Are like rains to living beings

Meaning: The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it

மு. வரதராசனார்: தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
சாலமன் பாப்பையா: அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.
மு. கருணாநிதி: காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku

Translation: The pride of living is for those Whose love is returned by love so close

Meaning: The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands)

மு. வரதராசனார்: காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
சாலமன் பாப்பையா: தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.
மு. கருணாநிதி: காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar
Veezhap Pataaar Enin

Translation: Whose love is void of love in turn Are luckless with all esteems they earn

Meaning: Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved

மு. வரதராசனார்: தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
சாலமன் பாப்பையா: தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.
மு. கருணாநிதி: விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

Naamkaadhal Kontaar Namakkevan Seypavo
Thaamkaadhal Kollaak Katai

Translation: What can our lover do us now If he does not requite our love?

Meaning: He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

மு. வரதராசனார்: நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
சாலமன் பாப்பையா: நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
மு. கருணாநிதி: நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu

Translation: One sided pains; love in both souls Poises well like shoulder poles

Meaning: Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both

மு. வரதராசனார்: காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா: ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
மு. கருணாநிதி: காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman
Oruvarkan Nindrozhuku Vaan

Translation: This cupid aims at me alone; Knows he not my pallor and pain?

Meaning: Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

மு. வரதராசனார்: ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?
சாலமன் பாப்பையா: ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?
மு. கருணாநிதி: காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il

Translation: None is so firm as she who loves Without kind words from whom she dotes

Meaning: There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved

மு. வரதராசனார்: தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
சாலமன் பாப்பையா: தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.
மு. கருணாநிதி: பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku

Translation: The lover accords not my desires And yet his words sweeten my ears

Meaning: Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears

மு. வரதராசனார்: யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா: நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
மு. கருணாநிதி: என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்

தனிப்படர் மிகுதி

Love • The Post-marital love
#1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

Uraaarkku Urunoi Uraippaai Katalaich
Cheraaaai Vaazhiya Nenju

Translation: You tell your grief to listless he Bless my heart! rather fill up sea!

Meaning: Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow)

மு. வரதராசனார்: நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
சாலமன் பாப்பையா: நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.
மு. கருணாநிதி: நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்