திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1171-1180 of 1330

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi
Thaamkaatta Yaamkan Tadhu

Translation: The eye pointed him to me; why then They weep with malady and pine?

Meaning: As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)

மு. வரதராசனார்: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
சாலமன் பாப்பையா: தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?
மு. கருணாநிதி: கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?

Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap
Paidhal Uzhappadhu Evan?

Translation: Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance?

Meaning: The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)

மு. வரதராசனார்: ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
சாலமன் பாப்பையா: வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?
மு. கருணாநிதி: விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum
Ithunakath Thakka Thutaiththu

Translation: Eyes darted eager glance that day It's funny that they weep today

Meaning: They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?

மு. வரதராசனார்: அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
சாலமன் பாப்பையா: அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
மு. கருணாநிதி: தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa
Uyvilnoi Enkan Niruththu

Translation: These eyes left me to endless grief Crying adry without relief

Meaning: These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up

மு. வரதராசனார்: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.
சாலமன் பாப்பையா: மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.
மு. கருணாநிதி: தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak
Kaamanoi Seydhaen Kan

Translation: My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly

Meaning: Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness

மு. வரதராசனார்: அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
சாலமன் பாப்பையா: கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
மு. கருணாநிதி: கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

Oo Inidhe Emakkinnoi Seydhakan
Thaaam Itharpat Tadhu

Translation: Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves

Meaning: The eyes that have given me this disease have themselves been seized with this (suffering) Oh! I am much delighted

மு. வரதராசனார்: எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
சாலமன் பாப்பையா: எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
மு. கருணாநிதி: ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu
Venti Avarkkanta Kan

Translation: Let tears dry up pining pining In eyes that eyed him longing longing

Meaning: The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears

மு. வரதராசனார்: அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
சாலமன் பாப்பையா: விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!
மு. கருணாநிதி: அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanaadhu Amaivila Kan

Translation: Ther's he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not

Meaning: He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him

மு. வரதராசனார்: உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
சாலமன் பாப்பையா: உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!
மு. கருணாநிதி: என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai
Aaragnar Utrana Kan

Translation: He comes; no sleep; he goes; no sleep This is the fate of eyes that weep

Meaning: When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony

மு. வரதராசனார்: காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
சாலமன் பாப்பையா: அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.
மு. கருணாநிதி: இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்

கண் விதுப்பழிதல்

Love • The Post-marital love
#1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

Maraiperal Ooraarkku Aridhandraal Empol
Araiparai Kannaar Akaththu

Translation: Like drum beats eyes declare my heart; From people who could hide his secret?

Meaning: It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums

மு. வரதராசனார்: அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
சாலமன் பாப்பையா: அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
மு. கருணாநிதி: காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல