திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 111-120 of 1330

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin

Translation: Equity is supreme virtue It is to give each man his due

Meaning: That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue

மு. வரதராசனார்: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா: பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
மு. கருணாநிதி: பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu

Translation: Wealth of the man of equity Grows and lasts to posterity

Meaning: The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity

மு. வரதராசனார்: நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா: நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்
மு. கருணாநிதி: நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital

Translation: Though profitable, turn away From unjust gains without delay

Meaning: Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity

மு. வரதராசனார்: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா: நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.
மு. கருணாநிதி: நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

Thakkaar Thakavilar Enpadhu Avaravar
Echchaththaar Kaanap Patum

Translation: The worthy and the unworthy Are seen in their posterity

Meaning: The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings

மு. வரதராசனார்: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
சாலமன் பாப்பையா: இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
மு. கருணாநிதி: ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani

Translation: Loss and gain by cause arise; Equal mind adorns the wise

Meaning: Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)

மு. வரதராசனார்: கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா: தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
மு. கருணாநிதி: ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam
Natuvoreei Alla Seyin

Translation: Of perdition let him be sure Who leaves justice to sinful lure

Meaning: Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."

மு. வரதராசனார்: தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா: தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
மு. கருணாநிதி: நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka
Nandrikkan Thangiyaan Thaazhvu

Translation: The just reduced to poverty Is not held down by equity

Meaning: The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity

மு. வரதராசனார்: நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
சாலமன் பாப்பையா: நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.
மு. கருணாநிதி: நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal
Kotaamai Saandrork Kani

Translation: Like balance holding equal scales A well poised mind is jewel of the wise

Meaning: To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise

மு. வரதராசனார்: முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா: முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.
மு. கருணாநிதி: ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa
Utkottam Inmai Perin

Translation: Justice is upright, unbending And free from crooked word-twisting

Meaning: Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind

மு. வரதராசனார்: உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா: மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
மு. கருணாநிதி: நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

நடுவு நிலைமை

Virtue • Domestic Virtue
#120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

Vaanikam Seyvaarkku Vaanikam Penip
Piravum Thamapol Seyin

Translation: A trader's trade prospers fairly When his dealings are neighbourly

Meaning: The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own

மு. வரதராசனார்: பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.
சாலமன் பாப்பையா: பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
மு. கருணாநிதி: பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்