திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 91-100 of 1330

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol

Translation: The words of Seers are lovely sweet Merciful and free from deceit

Meaning: Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous

மு. வரதராசனார்: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா: அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
மு. கருணாநிதி: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin

Translation: Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence

Meaning: Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind

மு. வரதராசனார்: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
மு. கருணாநிதி: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#93
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram

Translation: Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part

Meaning: Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue

மு. வரதராசனார்: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
சாலமன் பாப்பையா: பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.
மு. கருணாநிதி: முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum
Inpurooum Inso Lavarkku

Translation: Whose loving words delight each one The woe of want from them is gone

Meaning: Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech

மு. வரதராசனார்: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
சாலமன் பாப்பையா: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
மு. கருணாநிதி: இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira

Translation: To be humble and sweet words speak No other jewel do wise men seek

Meaning: Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)

மு. வரதராசனார்: வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா: தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
மு. கருணாநிதி: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin

Translation: His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow

Meaning: If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase

மு. வரதராசனார்: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையா: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
மு. கருணாநிதி: தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#97
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

Nayan Eendru Nandri Payakkum
Payaneendru Panpin Thalaippiriyaach Chol

Translation: The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds

Meaning: That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)

மு. வரதராசனார்: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா: பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
மு. கருணாநிதி: நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum

Translation: Kind words free from meanness delight This life on earth and life the next

Meaning: Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next

மு. வரதராசனார்: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
சாலமன் பாப்பையா: பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
மு. கருணாநிதி: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?

Translation: Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?

Meaning: Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

மு. வரதராசனார்: இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
சாலமன் பாப்பையா: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
மு. கருணாநிதி: இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

இனியவை கூறல்

Virtue • Domestic Virtue
#100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru

Translation: Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits

Meaning: To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe

மு. வரதராசனார்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
சாலமன் பாப்பையா: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
மு. கருணாநிதி: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்