திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1161-1170 of 1330

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku
Ootruneer Pola Mikum

Translation: It swells out like baled out spring How to bear this pain so writhing?

Meaning: I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it

மு. வரதராசனார்: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
சாலமன் பாப்பையா: என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
மு. கருணாநிதி: இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

Karaththalum Aatrenin Noyainoi Seydhaarkku
Uraiththalum Naanuth Tharum

Translation: I can't conceal this nor complain For shame to him who caused this pain

Meaning: I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it

மு. வரதராசனார்: இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
சாலமன் பாப்பையா: இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.
மு. கருணாநிதி: காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen
Nonaa Utampin Akaththu

Translation: In life -poles of this wearied frame Are poised the weights of lust and shame

Meaning: (Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them

மு. வரதராசனார்: துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
சாலமன் பாப்பையா: காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.
மு. கருணாநிதி: பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

Kaamak Katalmannum Unte Adhuneendhum
Emap Punaimannum Il

Translation: My lust is a sea; I do not see A raft to go across safely

Meaning: There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with

மு. வரதராசனார்: காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.
சாலமன் பாப்பையா: காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.
மு. கருணாநிதி: காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar

Translation: What wilt they prove when they are foes Who in friendship bring me woes!

Meaning: What will they prove when angry tempests lower?

மு. வரதராசனார்: ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
சாலமன் பாப்பையா: இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?
மு. கருணாநிதி: நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal
Thunpam Adhanir Peridhu

Translation: The pleasure in love is oceanful But its pangs are more painful

Meaning: The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater

மு. வரதராசனார்: காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
சாலமன் பாப்பையா: காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
மு. கருணாநிதி: காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

Kaamak Katumpunal Neendhik Karaikaanen
Yaamaththum Yaane Ulen

Translation: Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush

Meaning: I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live

மு. வரதராசனார்: காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா: காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.
மு. கருணாநிதி: நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

Mannuyir Ellaam Thuyitri Aliththiraa
Ennalladhu Illai Thunai

Translation: Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship

Meaning: The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion

மு. வரதராசனார்: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா: பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!
மு. கருணாநிதி: `இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1169
> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal
Netiya Kazhiyum Iraa

Translation: Crueller than that cruel he Are midnight hours gliding slowly

Meaning: The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me

மு. வரதராசனார்: ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
சாலமன் பாப்பையா: இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.
மு. கருணாநிதி: இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது

படர்மெலிந் திரங்கல்

Love • The Post-marital love
#1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

Ullampondru Ulvazhich Chelkirpin Vellaneer
Neendhala Mannoen Kan

Translation: Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!

Meaning: Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears

மு. வரதராசனார்: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா: என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.
மு. கருணாநிதி: காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது