திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1141-1150 of 1330

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1141
அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

Alarezha Aaruyir Na�rkum Adhanaip
Palarariyaar Paakkiyath Thaal

Translation: Rumour sustains my existence Good luck! many know not its sense

Meaning: My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of

மு. வரதராசனார்: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா: ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
மு. கருணாநிதி: எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor

Translation: Rumour gives me the flower-like belle People know not what rare angel

Meaning: Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me

மு. வரதராசனார்: மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
சாலமன் பாப்பையா: மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
மு. கருணாநிதி: அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

Uraaadho Oorarindha Kelavai Adhanaip
Peraaadhu Petranna Neerththu

Translation: I profit by this public rumour Having not, I feel, I have her

Meaning: Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already)

மு. வரதராசனார்: ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா: எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.
மு. கருணாநிதி: எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel
Thavvennum Thanmai Izhandhu

Translation: Rumour inflames the love I seek Or else it becomes bleak and weak

Meaning: Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away

மு. வரதராசனார்: எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா: ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
மு. கருணாநிதி: ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

Kaliththorum Kalluntal Vettatraal Kaamam
Velippatun Thorum Inidhu

Translation: Drink delights as liquor flows Love delights as rumour grows

Meaning: As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour

மு. வரதராசனார்: காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
சாலமன் பாப்பையா: கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.
மு. கருணாநிதி: காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

Kantadhu Mannum Orunaal Alarmannum
Thingalaip Paampukon Tatru

Translation: One lasting day we met alone Lasting rumours eclipse our moon

Meaning: It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent

மு. வரதராசனார்: காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
சாலமன் பாப்பையா: நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!
மு. கருணாநிதி: காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi

Translation: Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain

Meaning: This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother

மு. வரதராசனார்: இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
சாலமன் பாப்பையா: இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
மு. கருணாநிதி: ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal
Kaamam Nudhuppem Enal

Translation: To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee

Meaning: To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee

மு. வரதராசனார்: அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
சாலமன் பாப்பையா: இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
மு. கருணாநிதி: ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai

Translation: Who said \"fear not\" flared up rumour Why then should I blush this clamour?

Meaning: When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal

மு. வரதராசனார்: அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
சாலமன் பாப்பையா: அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
மு. கருணாநிதி: உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?

அலர் அறிவுறுத்தல்

Love • The Pre-marital love
#1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor

Translation: Town raising this cry, I desire Consent is easy from my sire

Meaning: The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)

மு. வரதராசனார்: யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
சாலமன் பாப்பையா: நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
மு. கருணாநிதி: யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்