திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1131-1140 of 1330

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali

Translation: Pangs of passion find no recourse Except riding *`palmyra horse' * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage

Meaning: To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse

மு. வரதராசனார்: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா: காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
மு. கருணாநிதி: காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu

Translation: Pining body and mind lose shame And take to riding of the palm

Meaning: Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse

மு. வரதராசனார்: (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
சாலமன் பாப்பையா: காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
மு. கருணாநிதி: எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal

Translation: Once I was modest and manly My love has now Madal only

Meaning: Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful

மு. வரதராசனார்: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
சாலமன் பாப்பையா: நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
மு. கருணாநிதி: நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

Kaamak Katumpunal Uykkum Naanotu
Nallaanmai Ennum Punai

Translation: Rushing flood of love sweeps away The raft of shame and firmness, aye!

Meaning: The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust

மு. வரதராசனார்: நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
சாலமன் பாப்பையா: ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
மு. கருணாநிதி: காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar

Translation: Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid

Meaning: She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night

மு. வரதராசனார்: மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
சாலமன் பாப்பையா: மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
மு. கருணாநிதி: மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan

Translation: Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair

Meaning: Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse

மு. வரதராசனார்: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையா: அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
மு. கருணாநிதி: காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil

Translation: Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control

Meaning: There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust

மு. வரதராசனார்: கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
சாலமன் பாப்பையா: அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
மு. கருணாநிதி: கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum

Translation: Lust betrays itself in haste Though women are highly soft and chaste

Meaning: Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)

மு. வரதராசனார்: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
சாலமன் பாப்பையா: இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
மு. கருணாநிதி: பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu

Translation: My perplexed love roves public street Believing that none knows its secret

Meaning: And thus, in public ways, perturbed will rove

மு. வரதராசனார்: அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
சாலமன் பாப்பையா: என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
மு. கருணாநிதி: என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

நாணுத் துறவுரைத்தல்

Love • The Pre-marital love
#1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

Yaamkannin Kaana Nakupa Arivillaar
Yaampatta Thaampataa Aaru

Translation: Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs

Meaning: Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered

மு. வரதராசனார்: யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
சாலமன் பாப்பையா: நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!
மு. கருணாநிதி: காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்