திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1111-1120 of 1330

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

Nanneerai Vaazhi Anichchame Ninninum
Menneeral Yaamveezh Paval

Translation: Soft blessed anicha flower, hail On whom I dote is softer still

Meaning: May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you

மு. வரதராசனார்: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
சாலமன் பாப்பையா: அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!
மு. கருணாநிதி: அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan
Palarkaanum Poovokkum Endru

Translation: You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed

Meaning: O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them

மு. வரதராசனார்: நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.
சாலமன் பாப்பையா: நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)
மு. கருணாநிதி: மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

Murimeni Muththam Muruval Verinaatram
Velunkan Veyththo Lavatku

Translation: The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes

Meaning: The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,

மு. வரதராசனார்: மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.
சாலமன் பாப்பையா: மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!
மு. கருணாநிதி: முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru

Translation: Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes

Meaning: If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."

மு. வரதராசனார்: குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
சாலமன் பாப்பையா: குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.
மு. கருணாநிதி: என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku
Nalla Pataaa Parai

Translation: Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!

Meaning: No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem

மு. வரதராசனார்: அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
சாலமன் பாப்பையா: என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.
மு. கருணாநிதி: அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

Madhiyum Matandhai Mukanum Ariyaa
Padhiyin Kalangiya Meen

Translation: Stars are confused to know which is The moon and which is woman's face

Meaning: The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance

மு. வரதராசனார்: விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
சாலமன் பாப்பையா: அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!
மு. கருணாநிதி: மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1117
அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu

Translation: Are there spots on the lady's face Just as in moon that changes phase?

Meaning: Could there be spots in the face of this maid like those in the bright full moon ?

மு. வரதராசனார்: குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
சாலமன் பாப்பையா: நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?
மு. கருணாநிதி: தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧.

Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi

Translation: Like my lady's face if you shine All my love to you; hail O moon!

Meaning: If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

மு. வரதராசனார்: திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
சாலமன் பாப்பையா: நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.
மு. கருணாநிதி: முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

Malaranna Kannaal Mukamoththi Yaayin
Palarkaanath Thondral Madhi

Translation: Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon!

Meaning: O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all

மு. வரதராசனார்: திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
சாலமன் பாப்பையா: நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.
மு. கருணாநிதி: நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்

நலம் புனைந்து உரைத்தல்

Love • The Pre-marital love
#1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

Anichchamum Annaththin Thooviyum Maadhar
Atikku Nerunjip Pazham

Translation: The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair

Meaning: The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji

மு. வரதராசனார்: அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
சாலமன் பாப்பையா: உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.
மு. கருணாநிதி: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை