திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1081-1090 of 1330

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

Anangukol Aaimayil Kollo Kananguzhai
Maadharkol Maalum En Nenju

Translation: Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!

Meaning: Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed

மு. வரதராசனார்: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
சாலமன் பாப்பையா: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
மு. கருணாநிதி: எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu
Thaanaikkon Tanna Thutaiththu

Translation: The counter glances of this belle Are armied dart of the Love-Angel

Meaning: This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me

மு. வரதராசனார்: நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
சாலமன் பாப்பையா: என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.
மு. கருணாநிதி: அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Pantariyen Kootren Padhanai Iniyarindhen
Pentakaiyaal Peramark Kattu

Translation: Not known before -I spy Demise In woman's guise with battling eyes

Meaning: I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities

மு. வரதராசனார்: எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது
சாலமன் பாப்பையா: எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.
மு. கருணாநிதி: கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip
Pedhaikku Amarththana Kan

Translation: This artless dame has darting eyes That drink the life of men who gaze

Meaning: These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity

மு. வரதராசனார்: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
சாலமன் பாப்பையா: பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.
மு. கருணாநிதி: பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

Kootramo Kanno Pinaiyo Matavaral
Nokkamim Moondrum Utaiththu

Translation: Is it death, eye or doe? All three In winsome woman's look I see

Meaning: Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?

மு. வரதராசனார்: எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
சாலமன் பாப்பையா: என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.
மு. கருணாநிதி: உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan

Translation: If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain

Meaning: Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows

மு. வரதராசனார்: வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
சாலமன் பாப்பையா: அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.
மு. கருணாநிதி: புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

Kataaak Kalitrinmer Katpataam Maadhar
Pataaa Mulaimel Thukil

Translation: Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover

Meaning: The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant

மு. வரதராசனார்: மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
சாலமன் பாப்பையா: அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
மு. கருணாநிதி: மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

Onnudhar Koo Utaindhadhe Gnaatpinul
Nannaarum Utkumen Peetu

Translation: Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet

Meaning: On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless

மு. வரதராசனார்: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
சாலமன் பாப்பையா: களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.
மு. கருணாநிதி: களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku
Aniyevano Edhila Thandhu

Translation: Which jewel can add to her beauty With fawn-like looks and modesty?

Meaning: Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

மு. வரதராசனார்: பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.
சாலமன் பாப்பையா: பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?
மு. கருணாநிதி: பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?

தகை அணங்குறுத்தல்

Love • The Pre-marital love
#1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Untaarkan Alladhu Atunaraak Kaamampol
Kantaar Makizhseydhal Indru

Translation: To the drunk alone is wine delight Nothing delights like love at sight

Meaning: Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at

மு. வரதராசனார்: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.
சாலமன் பாப்பையா: காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.
மு. கருணாநிதி: மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்