திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1041-1050 of 1330

நல்குரவு

Wealth • Miscellaneous
#1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu

Translation: What gives more pain than scarcity? No pain pinches like poverty

Meaning: There is nothing that afflicts (one) like poverty

மு. வரதராசனார்: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
சாலமன் பாப்பையா: இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
மு. கருணாநிதி: வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை

நல்குரவு

Wealth • Miscellaneous
#1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum

Translation: The sinner Want is enemy dire Of joys of earth and heaven there

Meaning: When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)

மு. வரதராசனார்: வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
சாலமன் பாப்பையா: இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
மு. கருணாநிதி: பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது

நல்குரவு

Wealth • Miscellaneous
#1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka
Nalkuravu Ennum Nasai

Translation: The craving itch of poverty Kills graceful words and ancestry

Meaning: Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech

மு. வரதராசனார்: வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா: இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.
மு. கருணாநிதி: ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்

நல்குரவு

Wealth • Miscellaneous
#1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

Irpirandhaar Kanneyum Inmai Ilivandha
Sorpirakkum Sorvu Tharum

Translation: Want makes even good familymen Utter words that are low and mean

Meaning: Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words

மு. வரதராசனார்: வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
சாலமன் பாப்பையா: நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.
மு. கருணாநிதி: இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்

நல்குரவு

Wealth • Miscellaneous
#1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith
Thunpangal Sendru Patum

Translation: The pest of wanton poverty Brings a train of misery

Meaning: The misery of poverty brings in its train many (more) miseries

மு. வரதராசனார்: வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
சாலமன் பாப்பையா: இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
மு. கருணாநிதி: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்

நல்குரவு

Wealth • Miscellaneous
#1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum

Translation: The poor men's words are thrown away Though from heart good things they say

Meaning: The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression

மு. வரதராசனார்: நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
சாலமன் பாப்பையா: நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
மு. கருணாநிதி: அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்

நல்குரவு

Wealth • Miscellaneous
#1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum
Piranpola Nokkap Patum

Translation: Even the mother looks as stranger The poor devoid of character

Meaning: He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother

மு. வரதராசனார்: அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
சாலமன் பாப்பையா: நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
மு. கருணாநிதி: வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்

நல்குரவு

Wealth • Miscellaneous
#1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu

Translation: The killing Want of yesterday Will it pester me even to-day?

Meaning: Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

மு. வரதராசனார்: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
சாலமன் பாப்பையா: நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
மு. கருணாநிதி: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்

நல்குரவு

Wealth • Miscellaneous
#1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

Neruppinul Thunjalum Aakum Nirappinul
Yaadhondrum Kanpaatu Aridhu

Translation: One may sleep in the midst of fire In want a wink of sleep is rare

Meaning: One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty

மு. வரதராசனார்: ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
சாலமன் பாப்பையா: யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
மு. கருணாநிதி: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்

நல்குரவு

Wealth • Miscellaneous
#1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Thuppura Villaar Thuvarath Thuravaamai
Uppirkum Kaatikkum Kootru

Translation: Renounce their lives the poor must Or salt and gruel go to waste

Meaning: The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water

மு. வரதராசனார்: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
சாலமன் பாப்பையா: உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.
மு. கருணாநிதி: ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு