திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 61-70 of 1330

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira

Translation: The world no higher bliss bestows Than children virtuous and wise

Meaning: Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children

மு. வரதராசனார்: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
சாலமன் பாப்பையா: அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.
மு. கருணாநிதி: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap
Panputai Makkat Perin

Translation: No evil comes and no blemish; Noble sons bring all we wish

Meaning: The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice

மு. வரதராசனார்: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
சாலமன் பாப்பையா: பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.
மு. கருணாநிதி: பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum

Translation: Children are one's wealth indeed Their wealth is measured by their deed

Meaning: Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

மு. வரதராசனார்: தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
சாலமன் பாப்பையா: பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
மு. கருணாநிதி: தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh

Translation: The food is more than nectar sweet In which one's children hands insert

Meaning: The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia

மு. வரதராசனார்: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா: தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
மு. கருணாநிதி: சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

Makkalmey Theental Utarkinpam Matru
Avar Sorkettal Inpam Sevikku

Translation: Children's touch delights the body Sweet to ears are their words lovely

Meaning: The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear

மு. வரதராசனார்: மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா: பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்
மு. கருணாநிதி: தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#66
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham
Makkal Mazhalaichchol Kelaa Thavar

Translation: The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay!

Meaning: "The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children

மு. வரதராசனார்: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா: பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
மு. கருணாநிதி: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal

Translation: A father's duty to his son is To seat him in front of the wise

Meaning: The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned

மு. வரதராசனார்: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
சாலமன் பாப்பையா: தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
மு. கருணாநிதி: தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu

Translation: With joy the hearts of parents swell To see their children themselves excel

Meaning: That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves

மு. வரதராசனார்: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
சாலமன் பாப்பையா: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
மு. கருணாநிதி: பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai

Translation: The mother, hearing her son's merit Delights more than when she begot

Meaning: The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth

மு. வரதராசனார்: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா: தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
மு. கருணாநிதி: நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்

மக்கட்பேறு

Virtue • Domestic Virtue
#70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai
Ennotraan Kol Enum Sol

Translation: The son to sire this word is debt \"What penance such a son begot!\"

Meaning: (So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father

மு. வரதராசனார்: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
சாலமன் பாப்பையா: தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.
மு. கருணாநிதி: ``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்
« Previous56789Next »
Page 7 of 133