திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 601-610 of 1330

மடி இன்மை

Wealth • Royalty
#601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

Kutiyennum Kundraa Vilakkam Matiyennum
Maasoora Maaindhu Ketum

Translation: Quenchless lamp of ancestry goes When foul idleness encloses

Meaning: By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished

மு. வரதராசனார்: ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
சாலமன் பாப்பையா: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.
மு. கருணாநிதி: பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்

மடி இன்மை

Wealth • Royalty
#602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

Matiyai Matiyaa Ozhukal Kutiyaik
Kutiyaaka Ventu Pavar

Translation: To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room

Meaning: Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct

மு. வரதராசனார்: தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.
மு. கருணாநிதி: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

மடி இன்மை

Wealth • Royalty
#603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

Matimatik Kontozhukum Pedhai Pirandha
Kutimatiyum Thanninum Mundhu

Translation: The fool who fosters sluggishness Before he dies ruins his house

Meaning: The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead

மு. வரதராசனார்: அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
சாலமன் பாப்பையா: விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
மு. கருணாநிதி: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்

மடி இன்மை

Wealth • Royalty
#604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku

Translation: Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth

Meaning: Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

மு. வரதராசனார்: சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
சாலமன் பாப்பையா: சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.
மு. கருணாநிதி: சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்

மடி இன்மை

Wealth • Royalty
#605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

Netuneer Maravi Matidhuyil Naankum
Ketuneeraar Kaamak Kalan

Translation: To lag, forget, idle and doze These four are pleasure boats of loss

Meaning: Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction

மு. வரதராசனார்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
சாலமன் பாப்பையா: காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
மு. கருணாநிதி: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

மடி இன்மை

Wealth • Royalty
#606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar
Maanpayan Eydhal Aridhu

Translation: With all the wealth of lords of earth The slothful gain nothing of worth

Meaning: It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it

மு. வரதராசனார்: நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
சாலமன் பாப்பையா: நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.
மு. கருணாநிதி: தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

மடி இன்மை

Wealth • Royalty
#607
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

Itipurindhu Ellunj Chol Ketpar
Matipurindhu Maanta Ugnatri Lavar

Translation: The slothful lacking noble deeds Subject themselves to scornful words

Meaning: Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject

மு. வரதராசனார்: சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
சாலமன் பாப்பையா: சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.
மு. கருணாநிதி: முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

மடி இன்மை

Wealth • Royalty
#608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku
Atimai Pukuththi Vitum

Translation: If sloth invades a noble house It will become a slave of foes

Meaning: If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies

மு. வரதராசனார்: சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
சாலமன் பாப்பையா: குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
மு. கருணாநிதி: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

மடி இன்மை

Wealth • Royalty
#609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

Kutiyaanmai Yulvandha Kutram Oruvan
Matiyaanmai Maatrak Ketum

Translation: The blots on race and rule shall cease When one from sloth gets his release

Meaning: When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear

மு. வரதராசனார்: ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
சாலமன் பாப்பையா: ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.
மு. கருணாநிதி: தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்

மடி இன்மை

Wealth • Royalty
#610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu

Translation: The slothless king shall gain en masse *All regions trod by Lord apace * Hindu mythology holds that Lord Vishnu measured with his feet the three worlds

Meaning: The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot

மு. வரதராசனார்: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
சாலமன் பாப்பையா: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
மு. கருணாநிதி: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்