திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 281-290 of 1330

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

Ellaamai Ventuvaan Enpaan Enaiththondrum
Kallaamai Kaakkadhan Nenju

Translation: Let him who would reproachless be From all frauds guard his conscience free

Meaning: Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing

மு. வரதராசனார்: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
மு. கருணாநிதி: எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

Ullaththaal Ullalum Theedhe Piranporulaik
Kallaththaal Kalvem Enal

Translation: \"We will by fraud win other's wealth\" Even this thought is sin and stealth

Meaning: Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another

மு. வரதராசனார்: குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா: அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
மு. கருணாநிதி: பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum

Translation: The gain by fraud may overflow But swift to ruin it shall go

Meaning: The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase

மு. வரதராசனார்: களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
சாலமன் பாப்பையா: திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
மு. கருணாநிதி: கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum

Translation: The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain

Meaning: The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow

மு. வரதராசனார்: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா: அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
மு. கருணாநிதி: களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

Arulkarudhi Anputaiya Raadhal Porulkarudhip
Pochchaappup Paarppaarkan Il

Translation: Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth

Meaning: The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property

மு. வரதராசனார்: அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா: அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.
மு. கருணாநிதி: மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan
Kandriya Kaadha Lavar

Translation: They cannot walk in measured bounds who crave and have covetous ends

Meaning: They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others

மு. வரதராசனார்: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
சாலமன் பாப்பையா: உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
மு. கருணாநிதி: ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

Kalavennum Kaarari Vaanmai Alavennum
Aatral Purindhaarkanta Il

Translation: Men of measured wisdom shun Black art of fraud and what it won

Meaning: That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude

மு. வரதராசனார்: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா: உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
மு. கருணாநிதி: அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#288
அளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

Alavarindhaar Nenjath Tharampola Nirkum
Kalavarindhaar Nenjil Karavu

Translation: Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts

Meaning: Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude

மு. வரதராசனார்: அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
சாலமன் பாப்பையா: உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.
மு. கருணாநிதி: நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

Alavalla Seydhaange Veevar Kalavalla
Matraiya Thetraa Thavar

Translation: They perish in their perfidy Who know nothing but pilfery

Meaning: Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression

மு. வரதராசனார்: களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
சாலமன் பாப்பையா: அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.
மு. கருணாநிதி: அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்

கள்ளாமை

Virtue • Ascetic Virtue
#290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth
Thallaadhu Puththe Lulaku

Translation: Even the body rejects thieves; The honest men, heaven receives

Meaning: Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud

மு. வரதராசனார்: களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
சாலமன் பாப்பையா: திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.
மு. கருணாநிதி: களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது