திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 301-310 of 1330

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk
Kaakkinen Kaavaakkaal En?

Translation: Anger against the weak is wrong It is futile against the strong

Meaning: He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

மு. வரதராசனார்: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
சாலமன் பாப்பையா: எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?
மு. கருணாநிதி: தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira

Translation: Vain is wrath against men of force Against the meek it is still worse

Meaning: Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil

மு. வரதராசனார்: பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
சாலமன் பாப்பையா: பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.
மு. கருணாநிதி: வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

Maraththal Vekuliyai Yaarmaattum Theeya
Piraththal Adhanaan Varum

Translation: Off with wrath with any one It is the source of sin and pain

Meaning: Forget anger towards every one, as fountains of evil spring from it

மு. வரதராசனார்: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா: தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
மு. கருணாநிதி: யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira

Translation: Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?

Meaning: What other foe to man works such annoy?

மு. வரதராசனார்: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
சாலமன் பாப்பையா: முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
மு. கருணாநிதி: சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam

Translation: Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay

Meaning: If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him

மு. வரதராசனார்: ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
சாலமன் பாப்பையா: தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.
மு. கருணாநிதி: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

Sinamennum Serndhaaraik Kolli Inamennum
Emap Punaiyaich Chutum

Translation: Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge

Meaning: The fire of anger will burn up even the pleasant raft of friendship

மு. வரதராசனார்: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
சாலமன் பாப்பையா: சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.
மு. கருணாநிதி: சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

Sinaththaip Porulendru Kontavan Ketu
Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru

Translation: The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground

Meaning: Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail

மு. வரதராசனார்: (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.
சாலமன் பாப்பையா: நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.
மு. கருணாநிதி: நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru

Translation: Save thy soul from burning ire Though tortured like the touch of fire

Meaning: Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger

மு. வரதராசனார்: பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா: பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.
மு. கருணாநிதி: தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin

Translation: Wishes he gains as he wishes If man refrains from rage vicious!

Meaning: If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of

மு. வரதராசனார்: ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
சாலமன் பாப்பையா: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.
மு. கருணாநிதி: உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்

வெகுளாமை

Virtue • Ascetic Virtue
#310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai

Translation: Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled

Meaning: Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)

மு. வரதராசனார்: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா: பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.
மு. கருணாநிதி: எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்