தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று சொல்வார்கள். பொதுவாகக் குரு என்று சொன்னால் அது தட்சிணா மூர்த்தியைத் தான் குறிக்கும். தட்சிணாமூர்த்தியைப் பற்றி ஒரு சுலோகம் வட மொழியில் உண்டு. ‘ஆல மரத்தினடியில் தேசு நிறைந்த திருமுகத்துடன் தென்முகக் கடவுள் வீற்றிருக்கிறார். அவருக்குக் கீழ் நான்கு மாணாக்கர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

என்ன ஆச்சரியம்! குருநாதர் இளையவராக இருக்கிறார்; மாணாக்கர்கள் கிழவர்களாக இருக்கிறார்கள்!’ என்று அந்தச் சுலோகம் சொல்கிறது. உலக இயலுக்கு மேற்பட்ட அநுபவத்தில் சிறந்த முனிவர்கள் மாணாக்கர்களாகவும் இளமையுடைய தட்சிணாமூர்த்தி குருநாதனாகவும் இருப்பதைக் காண்கிறோம். தோற்றத்தில் தட்சிணாமூர்த்தி இளமை உடையவரானாலும் அவர் காலம் கடந்த பேராளர். அவர் தோற்றத்தில் இளமையுடையவர்; அநாதி காலமாக இளமையோடு இருக்கிறவர் அவர்.

இது உலக இயலோடு ஒட்டிய குருமார்களுக்கு அமைந்தது. ஆனால் தெய்விகக் குருநாதர்களுக்கு இந்த விதி ஒவ்வாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *