72. இசைஞானியார்

சடைநாயனாரது திருமனைவியாராகிய இசைஞானி அம்மையார் சைவமுதல்வராகிய ஆளுடைய நம்பியென்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பெற்ற பெருமை வாய்ந்தவர். திருவாரூர் இறைவரை மறவாத நெஞ்ச முடையவர், இவர் திருப்பெயரை ஓதுவோர் சிவஞானம் பெறுவர்.

இவர், கமலாபுரத்தில் (திருவாரூரில்) கௌதம கோத்திரத்தவரான ஞானசிவாசாரியார் என்பவருடைய மகள் என்று திருவாரூர்க் கல்வெட்டிற் குறிக்கப் பெற்றுள்ளார்.

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம்‘.