68. நேச நாயனார்
காம்பீலி என்னும் பழம்பதியில் சாலியர் குலத்திலே தோன்றியவர் நேச நாயனார் . ஆடை நெய்யுந் தொழி லினராகிய இவர் சிவனடியார் திருவடிகளைச் சென்னி யிற்கொண்டு போற்றும் புகழுடையார். இவர் தம் மனத்தின் செய்கையைச் சிவபெருமான் திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையைத் திருவைந்தெழுத்துக்கு உரியதாக்கி, கைத்தொழிலின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராய் உடையும் கீளும் கோவணமும் நெய்து அடியார்களுக்கு அன்புடன் கொடுத்தவாகிய திருப்பணியினை இடையறாது செய்து இறைவன் திருவடி நிழலில் அமர்ந்து இன்புற்றார்.