65. அப்பாலும் அடிச்சார்ந்தார்
சேர சோழ பாண்டியர்களாகிய பாண்டியர்களாகிய மூவேந்தர்களால் ஆளப்பெறும் தமிழ் நாட்டுக்கு அப்பாலுள்ள பிற நாடுகளிற் பிறந்து சிவபெருமான் திருவடிகளை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையிலே போற்றப்பெற்ற சிவனடியார்கள் வாழ்ந்த காலத்துக்கு முன்னும் பின்னும் தோன்றிச் சிவபெருமானுடைய திருவடிகளைச் சார்ந்தவர்களும் அப்பாலும் அடிச்சார்ந்தார் என்னும் திருக்கூட்டத்தினராவர்