63. முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்

சிவபெருமானது திருவருளினாலே உண்மையான சிவாகம ஞானநெறியின்படி முறை தவறாமல் காலங்கள் தோறும் வழிபாடு செய்வதிற் பேரார்வமும் அன்பும் உடையராய் நாள்தோறும் விடியற்காலையில் நீராடித் திருநீறணிந்து திருவைந்தெழுத்தோதிக் காலை, நண்பகல், இரவு என்னும் மூன்று காலங்களிலும் சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி அருச்சிக்கும் ஆதிசைவ அந்தணர்கள் முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் என்னும் திருக்கூட்டத்தினராவர்