62. திருவாரூர்ப் பிறந்தார்கள்
சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருவாரூர்த் தலத்திலே பிறக்கும் பேறு பெற்றவர்கள் எல்லாரும் திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானுடைய திருக்கணத்தினராவர். அவர்கள் திருவடிகளை வணங்கி ஒன்றிய மனத்தினையுடையார்க்கு உயர்ந்த வீட்டு நெறி அணிமையுடையதாகும்.
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவகண நாதர்கள் என்னும் உண்மையினைச் சிவபெருமான் நமிநந்தி யடிகளுக்குப் புலப்படுத்தியருளிய செய்தி இங்கு நினைத்தற்குரியதாகும்.