60. பரமனையே பாடுவார்

தென்தமிழும் வடமொழியும் ஏனைய திசை மொழியும் ஆகியவற்றில் இறைவனையே பொருளாகக் கொண்டு இயற்றப்பெற்ற இயலிசைப் பாடல்களை ஒன்றிய மெய்யுணர் வினோடும் இசை பொருந்த உள்ளம் உருகிப் பாடும் அடியார்கள் பரமனையே பாடுவார் என்னும் திருக்கூட்டத் தினராவர்.