56. செருத்துணை நாயனார்

சோழநாட்டின் அகநாடுகளில் ஒன்றாகிய மருகல் நாட்டிலேயுள்ள தஞ்சாவூரிலே வேளாளர் குலத்தே தோன்றியவர் செருத்துணை நாயனார். சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சுடைய இவர் திருவாரூரை அடைந்து புற்றிடங்கொண்ட பெருமானைக் காலந்தோறும் போற்றித் திருத்தொண்டு புரிந்தார். ஒருநாள் பல்லவர் வேந்தர் கழற்சிங்கனாருடைய உரிமைப்பெருந் தேவி திருக்கோயிற் பூமண்டபத்தின் கீழ் வீழ்ந்து கிடந்த நறுமலரை எடுத்து முகர்ந்ததைக் கண்டு வெகுண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு சிவபெருமான் திறத்தில் குற்றஞ்செய்தோர் யாவராயினும் அச்சமின்றித் தண்டித்துத் திருத்திய இவர் இறைவர் திருவடி நீழல் அடைந்து இறவா இன்பம் எய்தினார்.